screw driver ஸ்டோரீஸ்
"இல்ல.. ஸ்கூல் மட்டுந்தான் சென்னைல படிச்சாரு.. டிக்ரி படிச்சதுலாம் ஹைதராபாத்ல..!!" அவர் அந்த மாதிரி சொன்னதும் அசோக்கிற்கு சுருக்கென்று இருந்தது.

"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" என்று மீரா எப்போதோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.

மீரா ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாள் என்று ஆரம்பத்தில் அவன் நம்பியிருந்தான். அவள் சரளமாக தெலுங்கு பேசியதும் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. பிறகு ஃபுட்கோர்ட் விளம்பர போர்டை பார்த்ததும், அது பொய்யென்று நினைத்தான். இப்போது கே.கே.மூர்த்தியின் பி.ஏ இப்படி சொன்னதும், மீண்டும் 'மீராவும் ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாளோ.. அங்குதான் அவளுக்கும் இந்த விஜயசாரதிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்குமோ..?' என்கிற ரீதியில் அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. 

"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??" 

கிஷோரின் அக்கா பவானி சொன்னது வேறு மூளையில் பளிச்சிட, அவன் மேலும் குழம்பிப் போனான். அவனுடைய புத்தி மெல்ல மெல்ல, தவறான புரிதலின் ஆழத்துக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த தவறான புரிதலுடன்தான்..

"மீரா டிக்ரி படிச்சது ஹைதராபாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன் மம்மி..!!" என்று இப்போது பாரதியிடம் சொன்னான்.

"ஓ.. எப்படி சொல்ற..??"

அசோக் தனது அனுமானத்தை அம்மாவிடம் விளக்கி கூறினான்.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவிடம் பேசியது பற்றி.. மீரா முன்பு தன்னிடம் குறிப்பிட்டது பற்றி.. எல்லாம் அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்..!!

"ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லதான் படிச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. அங்கதான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகிருக்கணும்..!! அந்த காலேஜ்ல போய் விசாரிச்சா.. கண்டிப்பா மீரா பத்தி ஏதாவது லீட் கெடைக்கும் மம்மி..!!"

"ஹ்ம்ம்.. அந்த காலேஜ் பேரு, அந்தப் பையன் எந்த வருஷம் படிச்சு முடிச்சான்.. அதுலாம் அவர்ட்ட விசாரிச்சியா..??"

"ம்ம்.. எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன்..!!"

"அப்புறம் என்னடா.. உடனே கெளம்ப வேண்டியதுதான.. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??"

"இன்னைக்கு நைட் கெளம்புறேன் மம்மி.. கிஷோரும் கூட வர்றேன்னு சொல்லிருக்கான்..!!"

"ம்ம்.. நல்லது..!! உடனே கெளம்பு.. அந்த காலேஜ்ல போய் விசாரி.. ஏதாவது தகவல் கெடைக்கும்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!"

"மீரா எனக்கு கெடைப்பாளா மம்மி..??" அசோக் திடீரென அந்த மாதிரி ஏக்கமாக கேட்கவும், பாரதி புன்னகைத்தாள். 

"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!" நம்பிக்கையாக சொல்லிவிட்டு, மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்.

அன்று இரவே அசோக்கும் கிஷோரும் ஜெட் ஏர்வேஸில் ஹைதராபாத் கிளம்பினார்கள்.. ஒரு மணி நேர பயணத்தின்பின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.. பஞ்சாரா ஹில்ஸ் சென்று, அவர்களது கல்லூரி நண்பன் பரணியின் வாடகை வீட்டு காலிங்பெல்லை அழுத்தினார்கள்..!! தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறான் பரணி..!!

"இதுதான் மச்சி என் பேரு..!!" 
சமீபத்தில் பூரி ஜகன்னாத் இயக்கி ஹிட்டடித்த ஒரு தெலுங்கு படத்தின் டைட்டில் கார்டில்.. அடுக்கடுக்காக காணப்பட்ட ஜாங்கிரி வரிசையில்.. நான்காவது வரியை சுட்டிக்காட்டி பல்லிளித்த பரணியை.. அசோக்கும் கிஷோரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..!!

"கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!"

கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!

[Image: RA+69.jpg]



அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், 'ரோக்' என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!! 
பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!

அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! 'சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..' என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!! 
அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!

விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 25-08-2019, 09:58 AM



Users browsing this thread: 8 Guest(s)