25-08-2019, 09:49 AM
நயன்தாரா, நிவின்பாலி நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளியானது!
நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவான "லவ் ஆக்ஷன் ட்ராமா" திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியானது.
ஃபன்டாஸ்டிக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நிவின்பாலி, நயன்தாரா ஆகியோர் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் லவ் ஆக்ஷன் ட்ராமா. மலையாள நடிகர் தயன் சீனிவாசன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டே வெளியானது. இப்படத்திற்கான எழுத்து வேலைகள் அந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. நயன்தாரா, நிவின் பாலி ஆகியோர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததால் அவர்களது கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். ஒருவழியாக படப்பிடிப்பு ஜூலை 2018ல் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அஜு வர்கீஸ் அறிவித்தார்.
அதன்படி இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 2018ல் தொடங்கியது. நிவின் பாலிக்கு வெற்றிப்படமாக அமைந்த ஓம் சாந்தி ஓசானா திரைப்படத்தில், நிவின் பாலியுடன் நடித்த, இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். வினித் ஸ்ரீனிவாசனின் தீரா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான தயன் ஸ்ரீனிவாசன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல், ஆக்ஷன் திரைப்படமான லவ் ஆக்ஷன் ட்ராமா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியானது.
மலையாளத்தில் மட்டும் வெளியாகும் இத்திரைப்படம், தமிழகத்தில் ஏற்கனவே நிவின்பாலி மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

first 5 lakhs viewed thread tamil