25-08-2019, 09:37 AM
இந்த அளவுக்கு உஷார் ஏன்
பல ஆண்டுகள் உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:* வெளிநாட்டில் வெளிமாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது அதுபோன்று இங்கும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அந்த சம்பவத்தின் சாராம்சத்தை அடியொற்றி உஷார் தகவலை அனைத்து மாவட்ட போலீசுக்கும் அனுப்புவது; இது வழக்கமானது பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தும்போது அவர்களின் சதித்திட்டம் குறித்த தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாநில மாவட்ட போலீசாரை உஷார் படுத்துவது.
* உளவாளிகள் வாயிலாக உளவுத்துறைக்கு கிடைக்கப்பெறும் ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிப்பது என உஷார் தகவல்களில் பல ரகம் உள்ளன.தற்போது தமிழகம் உஷார் படுத்தப்பட்டிருப்பது 'எம்.ஐ.' என சுருக்கமாக அழைக்கப்படும் 'ராணுவ நுண்ணறிவுப்பிரிவு' அளித்த ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில் என கூறப்படுகிறது.இதையொட்டியே மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஓர் அங்கமான சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படையானது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களை உஷார்படுத்தியிருக்கிறது.உள்ளூர் போலீசாரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பயங்கரவாதிகள் குழப்பமடைந்து தங்களின் திட்டத்தை கைவிடவோ அல்லது தள்ளிப்போடவோ வாய்ப்பிருக்கிறது.எனினும் பாதுகாப்பு பணியில் எவ்விதமான சமரசத்துக்கும் இடமிருக்காது. மறு உத்தரவு தொடரும் வரை பாதுகாப்பு தொடரும். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிப்பது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
விஷமிகளுக்கு எச்சரிக்கை!
உளவுத் தகவல் அடிப்படையில் போலீசார் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் விஷமிகள் சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை குழப்பி வருகின்றனர்.தங்களுக்கு வேண்டாத நபர்களை பழிவாங்கும் வகையில் அவர்களின் போட்டோ வாகனங்களின் எண்களை பரப்பி வருகின்றனர்.தவறான தகவல் பரப்பும் விஷமிகளுக்கு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில் ''உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மக்கள் அச்சப்பட வேண்டாம். விஷமிகள் சிலர் தவறான தகவல்களை கிளப்பி வருகின்றனர்; நம்ப வேண்டாம்'' என்றார்.
262 பேர் கைது
கோவையில் பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் 24 மணி நேரம் வாகன சோதனை நடந்து வருகிறது.இந்நிலையில் 'சாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 வரை 435 லாட்ஜ்கள் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் சிக்கினர்
பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கோவையில் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் சென்னையைச் சேர்ந்த சித்திக் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஜாகிர் உள்ளிட்ட மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

first 5 lakhs viewed thread tamil