25-08-2019, 09:36 AM
கோவையில் 'லஷ்கர்' பயங்கரவாதிகள்?:உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி
கோவை: பாக். ஆதரவு 'லஷ்கர் - இ- தொய்பா' பயங்கரவாதிகள் ஆறு பேர் தமிழகத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்களின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கடந்த ஏப்ரலில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். அதேபோன்று விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு 'லஷ்கர் -இ- தொய்பா' பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக ராணுவ உளவுப்பிரிவு 22ம் தேதி உஷார் படுத்தியிருந்தது.அதில் 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவியுள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர். எஞ்சிய ஐந்து பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.'இந்நபர்கள் தங்களை ஹிந்து போல வெளியில் காட்டிக்கொள்ள நெற்றியில் திலகமும், விபூதியும் அணிந்துள்ளனர். தற்போது கோவையில் பதுங்கி இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வராக இருக்கலாம்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்க' என குறிப்பிடப்பட்டிருந்தது.அதுமட்டுமின்றி 'வேளாங்கண்ணி மாதா கோவில்; நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி; கோவை சூலுார் விமானப்படை தளம்; கேரளாவிலுள்ள சபரிமலை மற்றும் முக்கிய வழிபாட்டு தளங்களே பயங்கரவாத கும்பலின் தாக்குதல் இலக்குகள்' என்ற அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்தே தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன.கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின் தற்போது தான் அதிக எண்ணிக்கையிலான போலீசார் அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் புல்லட் புரூப் கவச உடைகளுடன் ஷாப்பிங் மால் கோவில் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கோவையின் பல்வேறு இடங்களில் கமாண்டோ போலீஸ் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.மக்கள் மத்தியில் பீதி நிலவினாலும் போலீஸ் பாதுகாப்பின் மீதான நம்பிக்கையில் அன்றாட பணிகளை தொடர்கின்றனர்.தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் போலீஸ் கமிஷனர் சுமித்சரன், துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

first 5 lakhs viewed thread tamil