Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்
டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.
கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.



கடிதம்
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.


[Image: arun-jaitley-5-1566632923.jpg]
10-ஆம் தேதி
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி மூச்சுத்திணறலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 10-ஆம் தேதி தெரிவித்திருந்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-08-2019, 04:44 PM



Users browsing this thread: 102 Guest(s)