24-08-2019, 09:44 AM
விஷால் திருமணம் நிறுத்தம்? – கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்..!
விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள்.
இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.
இதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா வட்டாரங்களில் இது தொடர்பாக கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை. இது வதந்தியா, உண்மையா என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil