24-08-2019, 09:43 AM
வெறித்தனம் பாடல் “லீக்” – அதிர்ச்சியில் பிகில் படக்குழு..!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி வரும் இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இணைய தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil