Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை!
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசியருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
கேரள கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பிஹெச்டி படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் அந்த மாணவி, இதழியல் துறை தலைவரான பேராசிரியர் கர்ண மகாராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த டிசம்பர் மாதம் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதில் அடிபட்ட பேராசிரியர் கர்ண மகாராஜனின் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


[Image: teacher-16x9-768x432-1566618687.jpg]



பேராசிரியர் மறுப்பு
ஆனால் மாணவியின் இந்த பாலியல் குற்றச்சாட்டை பேராசிரியர் கர்ண மகாராஜன மறுத்து வந்தார். ஆனால் மாணவியின் புகார் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வந்தது.

[Image: 21vbg-mku-1566618753.jpg]
பணி ஓய்வு வழங்க முடிவு
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க முடிவு தீர்மானம் செய்யப்பட்டது.


[Image: girl3456-1566618802.jpg]
6 மாதங்களுக்குப் பிறகு
இதனை தொடர்ந்து பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கட்டாய பணி ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

[Image: 1509348111cover6-1566618842.jpg]
வரலாற்றில் முதல் முறை
மாணவி ஒருவரின் புகாரின் பேரில் பேராசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டாய பணி ஓய்வில் அனுப்பப்படுவது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-08-2019, 09:41 AM



Users browsing this thread: 105 Guest(s)