Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
70 வருடத்தில் இல்லாத பொருளாதார சரிவு.. மிக மோசம்.. கடைசியில் இவரே இப்படி சொல்லிவிட்டாரே!
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக சரிந்து இருக்கிறது என்று நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார சரிவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தொடக்கத்தில் இருந்ததை போல மிக மோசமான பொருளாதார நிலைக்கு இந்தியா சென்றுவிடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பொருளாதார சரிவு குறித்து தற்போது மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளும், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகரும் கூட குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி உள்ளனர். அதில் தற்போது சேர்ந்து இருக்கும் நபர் நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார்.


[Image: rajiv-kumar-1566556453.jpg]

பேட்டி
நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அளித்துள்ள பேட்டியில், கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து இருக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு சூழ்நிலை நிலவியது கிடையாது. இந்த சரிவு காரணமாக யாரும் யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

[Image: central-government-600-1566556624.jpg]
நடவடிக்கை என்ன
இதை சரி செய்ய மத்திய அரசு சில விஷயங்களை ஆலோசித்து வருகிறது. என்ன மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்று மத்திய அரசும், ஆர்பிஐ அமைப்பும் ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே இதில் முக்கியமான நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டு உள்ளது .


[Image: rajiv-kumar2323-1566556445.jpg]
கடந்த சில மாதம்
மத்திய வங்கி கடந்த சில மாதங்களில் முக்கியமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் பொருளாதாரத்தில் கொஞ்சம் சிரமமான தன்மை ஏற்பட்டது. முக்கியமாக பொதுத்துறை வங்கிகளுக்கு போதுமான சுதந்திரம் அளித்து இருக்கிறோம். அவர்கள் போதுமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

[Image: repo2323-1554360197-1566556674.jpg]

ரெபோ ரேட்
கடந்த சில மாதங்களில் மட்டும் நாங்கள் நான்கு முறை தொடர்ச்சியாக ரெபோ விகிதத்தை குறைத்து இருக்கிறோம். இதனால் கடனாளிகள் கொஞ்சம் பயன் அடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது பொருளாதார சரிவு மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இந்த இக்கட்டான நிலையை கடக்க போதுமான நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளோம் என்று ராஜிவ் குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-08-2019, 09:38 AM



Users browsing this thread: 34 Guest(s)