24-08-2019, 09:36 AM
கல்யாணத்திற்கு இன்னும் 8 நாள்தான்.. உற்சாகத்தில் இருந்த ஜான்சி ராணி.. காவு வாங்கிய செல்போன்
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த இளம் பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு- வீடியோ
திண்டிவனம்: செல்போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றார் ஜான்சிராணி. ஆனால் அடுத்த செகண்டே உடல் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
வர்ற 1-ம் தேதி ஜான்சிராணிக்கு கல்யாணம். இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பினார் இவர். கம்பெனிக்கு செல்லும் வழியில், சென்னை - திருச்சி ரயில்வே டிராக் உள்ளது. இதை கடந்துதான் கம்பெனிக்கு போக முடியும். இன்று ரயில்வே டிராக்கை கடக்க முயன்றபோது, செல்போன் பேசிக் கொண்டே கடந்துள்ளார்.
அந்த நேரம் பார்த்து திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஜான்சிராணி மீது படாரென மோதியது. ரயில் மோதிய வேகத்தில் ஜான்சிராணி தூக்கி வீசப்பட்டு, அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண் உயிரிழந்த தகவல் கேள்விப்பட்டு பலர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு குவிய ஆரம்பித்தனர். கல்யாணத்துக்கு இன்னும் 8 நாளே உள்ள நிலையில், இப்படி அநியாயமாக உயிர் பறி போய்விட்டதே என்று குடும்பத்தார் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

first 5 lakhs viewed thread tamil