screw driver ஸ்டோரீஸ்
"எ..எஸ்.. நேத்து ஈவினிங் உங்ககிட்ட அவர் பேசின ஒரு அரை மணி நேரத்துலதான்.. மர்டர் நடந்திருக்கு..!!"

"ஓகே..!! எ..எனக்கு அது தெரியாது..!!"

"ஹ்ம்ம்.. லாஸ்டா அவர்கிட்ட நீங்க என்ன பேசுனிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

"ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணிக்கிறது பத்தித்தான் பேசிக்கிட்டோம்..!! அவரை பாத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு.. இவ்வளவு நாளா அவர் யூ.எஸ்ல இருந்தாரு.. இப்போ.. இன்னும் ஃபைவ் டேஸ்ல நான் கல்ஃப் கெளம்புறேன்.. அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் திரும்ப வருவேன்..!! அதான்.. இந்த அஞ்சு நாள் விட்டா.. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே முடியாதுன்னு.. அதுக்கு நடுவுல ஒருநாள் மீட் பண்ணிக்க நெனச்சோம்..!! ஆக்சுவலா.. இன்னைக்கு மீட் பண்றதா இருந்தது.. அ..அதுக்குள்ள.. அதுக்குள்ள இப்படி.."

சொன்னதை முடிக்காமலே மீரா போலியாக விசும்ப ஆரம்பித்தாள்.. மலரவன் மீண்டும் தலையை சொறிந்துகொண்டார்.. அழுகிறவளை அவரே மறுபடியும் சமாதானம் செய்யுமாறு ஆகிப் போனது..!!

அதன்பிறகும் மலரவன் மீராவை பல கேள்விகள் கேட்டார்.. எல்லாமே விஜயசாரதி பற்றியும், அவனுக்கும் மீராவுக்கும் இருந்த நட்பு பற்றியுமான கேள்விகளாகவே இருந்தன..!! எல்லா கேள்விகளுக்கும் மீரா மிக இயல்பாக, புத்திசாலித்தனமாக, எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க முடியாத வகையில் பதில் சொன்னாள்..!! ஒரு கட்டத்தில் மலரவன் சலிப்படைந்து போனார்.. ஆரம்பத்தில் மீரா மீது இருந்த சிறிய சந்தேகமும் இப்போது அவருக்கு இல்லாமல் போயிருந்தது..!!

இருந்தாலும்.. அவளை சந்தேக லிஸ்டில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்பு.. இன்னும் ஒரு காரியம் செய்ய நினைத்தார்.. அவளுடைய கைரேகையை கலெக்ட் செய்துகொள்வதுதான் அது..!! அதை அவளிடம் நேரடியாக கேட்டு பெறுவதற்கும் அவருக்கு மனமில்லை.. அவள் பெண் என்பதும், அதிலும் அழகான பெண் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அவள் அறியாமலே அதை செய்யவேண்டும் என்று நினைத்தார்..!!

"வந்துமே கேட்ருக்கணும்.. ஏதோ ஞாபகத்துல மறந்துடுச்சு..!! ஏதாவது சாப்பிடுறீங்களா..?? காபி, டீ, ஜூஸ்..!!" என்று திடீரென கேட்டார்.

"இ..இல்ல ஸார்.. அதுலாம் வேணாம்..!!" மீரா தயங்கினாள்.

"பரவால.. சாப்பிடுங்க..!!"

"நோ ஸார்.. நீங்க மொதல்ல கேட்டு முடிங்க.. அப்புறமா.."

"கேக்க வேண்டியதுலாம் கேட்டு முடிச்சாச்சு.. அவ்வளவுதான்..!! ஏதாவது சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு கெளம்பலாம்..!!"

"ஓ..!!"

"சொல்லுங்க.. என்ன சாப்பிடுறீங்க..??"

"இ..இல்ல ஸார்.. ஒன்னும் வேணாம்..!!"

"நோ நோ.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. யு லுக் ஸோ டயர்ட் ஆல்ஸோ.. கண்டிப்பா ஏதாவது சாப்பிடனும்..!! சொல்லுங்க..!!" அவர் மிகவும் வற்புறுத்தவும்,

"ஓகே.. ஜூஸ்..!!" என்று மீரா ஒத்துக் கொண்டாள்.

மலரவன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு சொன்னார்.. அப்படி சொல்கையிலே கண்ணை சிமிட்டி அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார்..!! கைரேகை சேகரிப்பதற்கான யுக்தி அது என்பதை.. அந்த கான்ஸ்டபிளும் புரிந்துகொண்டு ஜூஸ் எடுத்துவர நகர்ந்தார்..!!

மீரா உஷாராக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. மலரவன் அந்த கான்ஸ்டபிளுக்கு கண்ணால் கொடுத்த சிக்னலை.. அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. தனது கைரேகையை சேகரிக்கத்தான் இந்த கரிசன நாடகம் எல்லாம் என்பது.. அவளுக்கும் விளங்காமல் இல்லை..!!

விஜயசாரதியின் வீட்டில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்.. அந்த வீட்டுக்குள் தனது கைரேகை படிந்திருக்க வாய்ப்பிருக்கிற இடங்களை எல்லாம்.. கைக்குட்டையால் துடைத்து முடித்து அவள் கிளம்பிய காட்சி.. இப்போது அவளது மனத்திரையில் பளிச்சிட்டது..!! மலரவனின் சிறுபிள்ளைத்தனமான இந்த முயற்சியை நினைத்து, அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது.. அதை மிக எளிதாக அடக்கிக் கொண்டாள்..!!

இரண்டே நிமிடங்களில்.. மஞ்சள் நிறத்திலான பழச்சாறு நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர்.. மீராவுக்கு முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது..!! அவள் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த டம்ளரை பற்றி.. கையில் எடுத்து உயர்த்தி.. அப்படியே தொண்டைக்குள் சரித்து.. மடக் மடக்கென முழுதும் குடித்து முடித்தாள்..!! கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டாள்..!! காலி டம்ளரை டேபிளில் வைக்காமல்.. மலரவன் முன்பாக உயர்த்தி பிடித்து காட்டியவாறே.. கொஞ்சம் கேலி கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்..!!

"இப்போ திருப்தியா ஸார்..??"

"வாட்..??" மலரவன் புருவத்தை சுருக்கினார்.

"இல்ல.. குடிச்சே ஆகணும்னு கம்ப்பெல் பண்ணுனிங்களே.. குடிச்சு முடிச்சாச்சு.. இப்போ திருப்தியான்னு கேட்டேன்..!!" கேட்டுவிட்டு மீரா புன்னகைக்க,

"ஹாஹா.. எ..எஸ் எஸ்.. திருப்தி..!!" மலரவன் ஒரு அசட்டு புன்னகையை சிந்தினார்.

"ம்ம்.. அப்போ நான் கெளம்புறேன் ஸார்..!!"

இயல்பான குரலில் சொன்ன மீரா.. டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு.. மலரவனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. சேரிலிருந்து எழுந்து.. திரும்பி விடுவிடுவென நடந்து.. ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 23-08-2019, 05:07 PM



Users browsing this thread: 8 Guest(s)