22-08-2019, 05:24 PM
‘இந்தியாவில் ஒரே ஒரு மெகா ஸ்டார்தான்’ - பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி
கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.
பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது அப்போது பேசிய சிரஞ்சீவி, “அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது” என்று கூறினார்.
first 5 lakhs viewed thread tamil