Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீஸில் புகார்...!

[Image: madhumitha.png]

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை மதுமிதா மீது கிண்டி காவல்நிலையத்தில் விஜய் டிவி நிர்வாகம் புகாரளித்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. 
[Image: bigg.png]
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை  காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். 
[Image: madu.png]
அதுமட்டுமல்லாமல், ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா,  ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  அதனை ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 21-08-2019, 04:50 PM



Users browsing this thread: 3 Guest(s)