21-08-2019, 04:46 PM
Quote:கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு.
[color=var(--content-color)]தமிழ்நாட்டைத் தவிர்த்து இதர மாநில மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களும் விருப்பத்துடன் படித்த இடம் அது. பன்முகத்தன்மையுடன் விளங்கிய அந்தக் கல்லூரியில் சமய பூசல்களோ, சாதிச் சண்டைகளோ வந்ததில்லை. நான் படித்த சமயத்தில், கல்லூரிக்கு வெளியே நடைபெற்ற பல சமூகப் பிரச்னைகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் கல்லூரியில் பல அரசியல் தலைவர்கள் நேரில் வந்து உரையாற்று வதற்கான இடமாகவும் இருந்தது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட், பி.சுந்தரய்யா போன்ற இடதுசாரித் தலைவர்களும் கல்லூரியில் உரையாற்றியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்துக்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருந்தபோது, கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர்களாகப் பலர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர். அங்கு படித்த தோழர் பிரகாஷ் காரத் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, வரலாறு.
இப்படிப்பட்ட பாரம்பர்யம் மிகுந்த ஒரு கல்லூரியில், கடந்த 182 ஆண்டுகளில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம். அதில் நல்லதும் இருக்கலாம்... கெட்டதும் இருக்கலாம். அதற்காக நிறுவனத்தையும், அதை நடத்திவரும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் பொத்தாம் பொதுவாகத் தூற்றுவது எப்படி நியாயமாகும்? அவர் முன்னால் வந்த வழக்கில், மாணவிகளின் புகார் விசாரிக்கப்பட்டு அதன்படி கல்லூரி நிர்வாகம் அந்தப் பேராசிரியரை பணியிலிருந்து நீக்கியது சட்டப்படிச் செல்லும் என்று கூறிய நீதியரசர், அத்துடன் கோப்பை முடிக்காமல் தன்னுடைய சொந்தக் கருத்தை உலக உண்மை யாகப் பதிந்துள்ளது தவறான செயலாகும்.
மீரட் வளர்ச்சிக் குழும வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘நீதிபதிகள் தங்கள் முன்னால் வரக்கூடிய வழக்குகளில் கூறப்பட்ட பொருண்மைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு கூற வேண்டுமே தவிர, தங்களுடைய சொந்தக் கருத்துகளைப் பதிவு செய்யக் கூடாது’ என்று கூறிய பிறகும், இப்படி பலர் செயல்பட்டுவருவது வருந்தத்தக்கது. சிறுபான்மையினர் மட்டுமின்றி, இதர சமயத்தைச் சேர்ந்தவர்களும் இருபாலர் பயிற்சிப் பள்ளிகளை நடத்திவருகின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 672 பொறியியல் கல்லூரிகள், இருபாலரும் சேர்ந்து பயிலும் கல்லூரிகளாகத்தான் நடைபெற்றுவருகின்றன.[/color]
[color=var(--content-color)]கல்லூரி மட்டுமின்றி மேனிலைப் பள்ளிகளிலும் இருபாலர் பயிலக்கூடிய பல பள்ளிகள் தமிழகத்தில் உண்டு. என்றைக்கு இருபாலருக்கும் பொதுவான நிறுவனம் செயல்படுகிறதோ அந்த நிறுவனத்தில் பாலியல் பிரச்னைகள் உருவாவது உண்டு. அப்படிப்பட்ட உளவியல் பிரச்னை களைத் தீர்ப்பதற்காகத்தான் பள்ளியிலிருந்தே பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வி அறிஞர்கள். நிலைமை அப்படி இருக்கும்போது, பெற்றோர்களிடமிருந்து புகார் வருவதாகத் தனது தீர்ப்பில் நீதியரசர் பதிவிட்டு, அப்படிப் பட்ட பாலியல் புகார்கள் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அதிகமாக நடைபெறுவதாகக் கூறுவதற்கு, அவர் எந்தவித ஆதாரத்தையும் சுட்டிக்காட்ட வில்லை.
இந்தியா போன்ற மதசார்பற்ற ஒரு குடியரசுக்காக உருவாக்கப் பட்ட அரசமைப்புச் சட்டத்தில், மொழி மற்றும் சமயம் சார்ந்த சிறுபான்மையினர் தங்கள் விருப்பத்துக்கேற்ப கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அடிப்படை உரிமையாக 30-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நூற்றாண்டு களாக, கிறிஸ்துவ நிறுவனங்கள் தரமான பல கல்வியை சேவை மனப்பான்மையுடன் அளித்து வருகின்றன. இந்த வரலாற்றைச் சீர்குலைக்கும்விதமாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது தவறு. எனவே, நீதியரசர் வைத்தியநாதன் அவர்களை, டென்னிசன் என்கிற பேராசிரியர் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நேரத்தில், தனது தீர்ப்புக்கு ஒவ்வாத கருத்தைப் பதிவு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பிலிருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அவர் யாரிடமிருந்தும் மனுவை எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், கனம் நீதிபதி அவர்கள் பல வழக்குகளில் தானே முன்வந்து வழக்கைப் பதிவுசெய்து தீர்ப்பளித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. நீதியரசர் செய்வாரா[/color]
first 5 lakhs viewed thread tamil