21-08-2019, 04:45 PM
[color=var(--title-color)]சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா?
[color=var(--content-color)]ஜூனியர் விகடன் டீம்[/color]
[color=var(--content-color)]அரஸ்[/color]
[color=var(--title-color)]கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்[/color][/color]
[color=var(--meta-color)]Sexual-harassment[/color]
[color=var(--content-color)]சென்னை கிறிஸ்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் இருவர், கல்லூரி மாணவிகள் கொடுத்த பாலியல் தொந்தரவுப் புகாரில் சிக்கி, விசாகா கமிட்டி விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன். அதேசமயத்தில் அந்தத் தீர்ப்பில் வழக்குக்கு எந்த வகையிலும் ஒவ்வாத கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
`சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருபாலருக்கும் கல்வி கற்பிப்பதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. பாலியல் சீண்டல் புகார்கள் அதிகம் வருவதாகப் பெற்றோர்களிடம் கருத்து நிலவுகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல... எந்தவித ஆதாரமும் இல்லாத, பொத்தாம்பொதுவான கூற்று. இப்படியெல்லாம் கூறுவதற்கு நீதிபதிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாததுடன், சட்டவரையறைக்குப் புறம்பான செயலுமாகும்.
182 வருடங்களாகச் செயல்பட்டுவரும் சிறப்பான ஒரு கல்லூரியைப் பற்றியும் அதை நடத்திவரும் மத சிறுபான்மையினரைப் பற்றியும் கூறுவதற்கு நீதிபதிக்கு எப்படி மனம் வந்தது? இந்தியாவில் தலைசிறந்த அறிவுஜீவிகளையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், நீதிபதிகளையும் வெளிக்கொண்டுவந்த கல்வி நிறுவனம் அது. எல்லா கல்லூரிகளும் சென்னை நகரத்துக் குள் தொடங்கப்பட்டபோது, அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் அந்தக் கல்லூரி துணிச்சலாகத் தொடங்கப்பட்டது. தவிர, முதன்முறையாக இருபாலர் கல்வி நிறுவனமாக அது தொடங்கப்பட்டதுதான் அதன் சிறப்பே. தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 275 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தக் கல்லூரியில், 8,500 மாணவர்கள் படிக்கிறார்கள்; 300 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், மேற்குவங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சாந்தா ஷீலா நாயர், கிறிஸ்துதாஸ் காந்தி, இந்திய காவல் துறைப் பணியைச் சேர்ந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் முதல் விஜயகுமார் ஐ.பி.எஸ் வரை படித்த கல்லூரி அது. மேலும், பரிதிமாற்கலை ஞரில் தொடங்கி இன்றைய தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ்.லஷ்மி) வரை பயின்ற நிறுவனம் அது. இதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே.ராஜன், கே.சந்துரு, பி.டி.தினகரன், சுதந்திரம், எம்.ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரபாபு, பார்த்திபன், சி.வி.கார்த்திகேயன் முதலானவர்களை அந்தக் கல்லூரி வளர்த்து வழங்கியுள்ளது. இவையெல்லாம் நீதிபதி வைத்தியநாதனுக்குத் தெரியுமா?
1970-களில் நான் சென்னை கல்லூரி ஒன்றிலிருந்து இரண்டாவது வருடப் பட்டப்படிப்பில் வெளியேற்றப்பட்டபோது, சென்னை கிறிஸ்துவக் கல்லூரிதான் எனக்கு புகலிடம் வழங்கி, பட்டதாரி ஆக்கியது. அப்போது கல்லூரி மாணவிகள் விடுதி, கல்லூரி வளாகத்தில் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்துக்கு அருகில் (தற்போது தென்சென்னை கோட்டாட்சியர் அலுவலகம் உள்ள இடத்தில்) இயங்கி வந்தது. இது, பெற்றோர்களை திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. ஏனென்றால், 275 ஏக்கர் பரப்பளவு உள்ள வளாகத்தில் அவர்களுக்குத் தனி விடுதி அமைப்பது ஒன்றும் சிரமமானதல்ல. அந்தச் சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் மாணவிகளின் நலனைக் கருதி அவர்களுக்கும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே விடுதி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, இன்றைக்கு மாணவிகள் விடுதியும் தாம்பரம் வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.[/color]
[color=var(--content-color)]
[/color]
[color=var(--content-color)]உலகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள், ‘இருபாலர் பயிற்சிப் பள்ளிகள்தான் சிறப்பான கல்வியைக் கற்பிக்க முடியும்’ என்று கூறியுள்ளனர். ஏனென்றால், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் புரிந்துகொள்வதற்கு, அப்படிப்பட்ட நிறுவனங்கள்தான் உதவி செய்ய முடியும். நான் அந்தக் கல்லூரியில் படிக்கும்போது எங்களுடைய அரசியல் நடவடிக்கைக்கு எந்தவிதமான தடையும் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக எந்தப் புகாரும் வந்ததில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல ஓர் உறவு இருந்த கல்லூரி ஒன்று உண்டென்றால், அது தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியாக மட்டுமே இருக்கும்.[/color]

first 5 lakhs viewed thread tamil