21-08-2019, 09:46 AM
ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. 2 மணி நேரத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு!
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.
இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக எம்பி கார்த்தி சிதம்பரம் மீதும் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
![[Image: chidambaram-15301114012-1566309663.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/chidambaram-15301114012-1566309663.jpg)
என்ன கணிப்பு
இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஏற்கனவே சிபிஐக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
![[Image: chidhambaram1-1566309649.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/chidhambaram1-1566309649.jpg)
ஜாமீன்
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
![[Image: supremecourt3-1566309743.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/supremecourt3-1566309743.jpg)
ஜாமீன் இல்ல
இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார். அதன் பின் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.இதனால் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டில் குவிக்கப்பட்டனர்.
![[Image: cbi-1566309656.jpg]](https://tamil.oneindia.com/img/2019/08/cbi-1566309656.jpg)
ஆள் இல்லை
ஆனால் ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவர் வீட்டில் இல்லாததால் சிபிஐ திரும்பி சென்றனர். இந்த நிலையில் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டிலும் இது தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

first 5 lakhs viewed thread tamil

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)