Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கையை அறுத்துக் கொண்டது பற்றி மதுமிதா விளக்கம்



[Image: NTLRG_20190820153803010750.jpg]

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை மிகவும் இழிவுப்படுத்தியதாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.


தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தால் பிக் பாஸ் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் நடிகை மதுமிதா. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மதுமிதா அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " கடந்த வியாழக்கிழமை ஹலோ ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடககாரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன்.

இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார்.

இதற்கு நானும் பதில் அளித்தேன். ஹலோ ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒற்றுக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர்.

அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்" என மதுமிதா தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 21-08-2019, 09:28 AM



Users browsing this thread: 6 Guest(s)