20-08-2019, 07:40 PM
ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்ப மொத்த குடும்பமே ஒன்று திரண்டிருந்தது. இருவரையும் ட்ரைன் ஏற்றி விட்டு அனைவரும் கை அசைக்க ராஜியும் கார்த்திக்கும் தங்களது பெர்த் நோக்கி சென்றனர்.
கார்த்திக் முகத்தில் இப்போது தான் பிரகாச ஒளி மின்னியது. அதற்கு நேர் மாறாக ராஜியின் முகம் பொலிவின்றி காணப்பட்டது. என்னதான் கார்த்திக்கிடம் உரிமை எடுத்து கொண்டாலும் அது இங்கு இருக்கும் வரை மட்டுமே. சென்னை சென்ற பின்பு அது மாறும். இங்கு இருந்ததை போன்று அவன் அறையில் நொடிப்பொழுதும் அவன் அருகாமையை அங்கு எதிர் பார்க்க முடியாது.
அவனுடன் கழித்த இந்த 4 நாட்களும் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தனக்கு அது சொர்க்கமாகவே இருந்தது. இனி அது கிடைக்குமா. இதை அவனிடம் சொன்னாலும் அவனுக்கு புரியுமா. சென்னை சென்று எப்படி இந்த கல்யாண மேட்டரை மறைப்பது. குறிப்பாக மீராவுக்கு தெரியாமல். அங்கு சென்று தன் வாழ்க்கை எப்படி மாறும். இப்படியாக பல குழப்பங்களில் அவள் சிந்தித்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் கார்த்திக் அவளை அழைத்தான். “ ஹலோ மிஸ் ராஜி. என்ன சிந்தனை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. ”
“ ம்ஹூம் ஒன்னும் இல்லை. “
“ இந்த 4 நாள் என்ன ஆட்டம் போட்ட. இப்போ சைலண்ட்டா இருக்கா. அடுத்த பிளான் எதாச்சும் ரெடி பண்றியா. “
“ உங்களுக்கு என்னோட லவ் புரியவே புரியாதா. இல்லை நடிக்கிரீங்களா. “
“ நான் எங்க நடிச்சேன். நான் தான் ஆரம்பத்துல இருந்தே உங்கிட்ட சொன்னேனே. எனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னு. நீதான் என்ன லவ் பண்றன்னு சொன்ன. ஆனாலும் சும்மா சொல்ல கூடாது. நல்லாவே ட்ராமா போட்ட.”
“ கார்த்திக் என்னோட லவ் உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கன்னு எனக்கு தெரியல. நீங்க நான் என்ன செஞ்சா என்ன நம்புவீங்க. “
“ இப்போ எதுக்கு மறுபடியும் டிராமா போடுற. எனக்கு நீ இல்ல. லவ்ன்னு சொல்லி வேற எந்த பொன்னும் என்கிட்ட வந்தாலும் நான் இதை தான் சொல்லுவேன். ஐ ஹேட் லவ். குறிப்பா பொண்ணுகளோட லவ். பசங்களோட லவ் கண்ணுல ஆரம்பிச்சு காமத்துல முடியும். ஆனா பொண்ணுங்களோட லவ் அன்புல ஆரம்பிச்சு அழிவுல தான் முடியும். எனக்கு காமமும் வேண்டாம். அழிவும் வேண்டாம்.”
“ இந்த அளவுக்கு காதல் மேல ஏன் உங்களுக்கு இவ்ளோ வெறுப்பு. அப்படி என்னதான் நடந்துச்சு. “
“ எனக்கு எதுவும் நடக்கல. நடந்தாலும் அதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை. எனக்கு தூக்கம் வருது. நான் மேல படுத்துகிடுறேன். நீ கீழ படுத்துக்கோ. நாளைக்கு மார்னிங் பேசிக்கலாம். “ சொல்லி விட்டு ராஜியின் பதிலை எதிர்பாராமல் அவன் மேல உள்ள பெர்த்தில் சென்று படுத்து கொண்டான்.
ராஜிக்கு அழுகையாக வந்தது. ஆனாலும் கட்டுபடுத்தி கொண்டாள். ஏற்கனவே குழம்பி இருந்த அவள் மனது கார்த்திக்கின் புரியாத பதில்களால் மேலும் குழம்பியது. கனத்த மனதுடன் அமர்ந்து யோசித்தாள்.
ராஜி நினைத்தால் லட்சுமியிடம் சொல்லி கார்த்திக்கை மிரட்டலாம். இல்லை கார்த்திக்கை நேரடியாக கூட மிரட்டலாம். ஆனால் அவளுக்கு அந்த இரண்டிலும் துளி அளவும் விருப்பம் இல்லை. அவன் கார்த்திக்கை காதலித்தாள். மொத்தமாக காதலித்தாள். அவன் குணம், மனிதாபிமானம், மற்ற பெண்களிடம் அவன் பழகும் விதம்,
அவனது Attitude , சிரிப்பு , கோவம் இதை எல்லாம். இப்படி மொத்தமாக அவன் வேணும். ஆனால் அவனிடம் இல்லாத ஒன்றை அவள் அவனிடம் தேடினாள். காதல். மூன்று எழுத்து மந்திர சொல். கார்த்திக்கிடம் பல சூழ்நிலைகளில் இதில் ஒன்றை பார்த்திருக்கிறாள்.
அவனிடம் காதல் மட்டும் இதுவரை அவள் கண்டதில்லை. அந்த ஒன்று வரும் வரை அவனுக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் அவள் காத்திருப்பாள். மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு வயதில் காதல் வயபட்டே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி. அவனிடம் அவள் காதலை தேடி பார்க்க விரும்பினாள்.
பல சிந்தனைகளுடன் அவள் உறங்கியும் போனாள். சென்னை எழும்பூரை ட்ரைன் நெருங்கி ஒவ்வொருவராக இறங்க இருவரும் விழித்தனர். கார்த்திக் ராஜியிடம் ஒன்றும் கூறாமல் தனது பேக்கை எடுத்து கொண்டு கீழே இறங்கினான். ராஜியும் அவன் பின்னாலே சென்றாள்.
“ சரி. நீ ரூமுக்கு கிளம்பு. நானும் என்னோட பிளாட்டுக்கு போறேன். நாளைக்கு ஆபிஸ் வந்தா போதும். சரியா. “
“ நீங்க எப்படி போறீங்க. “
“ நான் கேப் பிடிச்சி போய்டுவேன். நீயும் பத்திரமா போ. எப்படி போகணும்னு தெரியும்ல.
“
“ ம்ம்ம்ம். “ ராஜி சோகமாகவே காணபட்டாள். ஆனால் கார்த்திக் அதை பற்றி கவலை பட்டவனாக தெரியவில்லை.. அவளிடம் பாய் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகை இப்போது உடைத்து கொண்டு வந்தது. அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கண்களை மூடி வெளியே தெரியாதவாறு அழுதாள்.
ஒரு பெண்ணை தனியாக விட்டு செல்கிறோம் என்று கூட நினைக்காமல் செல்லும் கார்த்திக்கின் மீது அவளுக்கு கோபமாக வந்தது. “ இது உன்னோட குணம் இல்லையே கார்த்திக். உன்கிட்ட பிடிச்சதே உன்னோட இந்த மாதிரியான குணங்கள் தானே. இப்போ அது எங்க போச்சு. இதை போன்று பல சூழ்நிலைகளில் நீ லீனா, மீராவிற்கு உதவி செஞ்சிருக்க. ஆனா இன்னைக்கு அது எங்க போச்சு. ஒரு வேலை அது நான் என்பதற்காகவா. “
அப்போது அவள் அருகில் நிழல் ஆட திரும்பி பார்க்க அங்கு கார்த்திக் நின்று கொண்டிருந்தான்.
“ அழுகுரியா. “
“ இல்ல . கண்களை துடைத்து கொண்டாள். “
“ அப்போ ஏன் இங்க உக்காந்துருக்க. ரூம் போகல.”
“ எனக்கு ரூம் போக தெரியும். நீங்க உங்க வேலையை பாருங்க. “
“ ஓஹ கோபம்லா வருமா உனக்கு. இப்போ புரியுதா. காதல் ஏன் வேண்டாம்னு சொல்றேன்னு. முதல்ல எதிர்பார்ப்பு வரும். அப்புறம் கோவம் வரும். போக போக நீயே புரிஞ்சிப்ப. சரி அதை விடு. எழுந்துரு. கிளம்பலாம். நான் கேப் புக் பண்ணிட்டேன். வா நானே உன்னை ரூம்ல விட்டுடுறேன். இது உன்மேல உள்ள அக்கறையோ லவ்வோ கிடையாது. ஒரு பொன்னை தனியா இப்படி விட்டுட்டு போக மனசு வரல. அதான். போலாமா. “
அவனை சிறிது நேரம் பார்த்தவள் “ சரி வரேன். “ என்று சொல்லலி அவனுடன் சென்றாள். கார் சரியாக அவள் ரூமிற்கு செல்ல கார்த்திக் காரை விட்டு இறங்காமல் இருந்தான். ராஜி அவன் எதாவது பேசுவான் என்று எதிர்பார்க்க அவன் அமைதியாக போனை நோன்டி கொண்டிருந்தான். பேக்கை எடுத்து கொண்டு அவள் இறங்க அண்ணா போகலாம்னா என்று சொல்லி காரை கிளப்பினான்.
கார் செல்லும் வரை ராஜி காரையே வெறிக்க அங்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. தன்னிடம் இருந்த சாவியை கொண்டு ரூமை திறந்து உள்ளே சென்றவள் பேக்கை வைத்து விட்டு குளியலறை சென்று நன்றாக அலுப்பு தீரும் வரை குளித்தாள்.
இன்று மீரா இல்லை. இருந்திருந்தாள் கார்த்திக்கை பார்த்திருக்க கூடும். நோண்டி நோண்டி கேள்வி கேட்பாள். நல்லதுக்கு தான் என்று நினைத்து கொண்டாள். பின் மீராவிற்கு கால் செய்து தான் சென்னை வந்து விட்டதை சொன்னாள்.