20-08-2019, 05:14 PM
அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!
'மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!'
மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..
"என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??"
அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,
"ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!" என்றார் மெலிதான புன்னகையுடன்.
"அதனால என்ன ஸார்.. பரவால..!!" சொன்ன மலரவன் அவரை நெருங்கி,
"Can I borrow a cigarette..??" என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.
உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!
"வெப்பன் கெடைச்சதா ஸார்..??" கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.
"எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!" பதில் சொன்னார் மலரவன்.
"ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??"
"பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் 'ம்ம்.. ம்ம்..'ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்... அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்.."
"என்ன..??"
"உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!
first 5 lakhs viewed thread tamil