Romance உன்னருகே நானிருந்தால்
#1
Heart 
“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................” அன்னைக்கி மத்தியானம் 12 மணிக்கு banglore பஸ் ஸ்டாப்ல செம climate, சாயந்திரம் 6 மணி மாதிரி இருட்டா இருந்துச்சு .. நா சென்னைக்கு போற பஸ்ல என்னோட சீட்ல bag வச்சுட்டு கீழ வந்து இந்த climateku ஒரு டி குடுச்சா சூப்பரா இருக்கும்னு கீழ இறங்குனேன் , ஆனா அது மழைக்கு பொறுக்காம கீழ இறங்கி ரெண்டு steps நடக்குங்காட்டி மழை வேகமா பெய்ய ஆரம்பித்தது .. 

ஒரு டீக்கு ஆசைப்பட்டு fulla நனையனுமானு யோசிச்சு மறுபடியும் பஸ்லயே ஏறி உட்காந்தேன் .. மழை பெய்தாலே நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷம் வந்திருதுல .. அதுவும் பஸ்ஸோட ஜன்னல் சீட்ல உட்காந்து வெளிய அந்த மழைய பாத்து ரசிச்சிகிட்டே நம்ம இளையராஜாவோட பாட்டுங்கள போன்ல போட்டு விட்டு கேட்க ஆரம்பிச்சோம்னா சும்மா அபிடியே சொர்க்கம் மாதிரி இருக்கும் .. அந்த சந்தோஷமான தருனத்த கெடுகின்ற விதமா யாரோ போன் பண்ணாங்க போன எடுத்து பார்த்தா என்னோட மாமா attend பண்ண உடனே hellonu கூட சொல்லாம பஸ் ஸ்டோப்கு போய்டியா இல்லையான்னு ? கேட்டாரு ..

இது அவர் இன்னிக்கி இதோட 5vadhu வாட்டி எனக்கு போன் பண்ணி கேட்குறாரு .. இப்ப பஸ்லதான் உட்காந்துட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் இப்படி என்கிட்ட கேக்குறதுக்கு காரணம் நா சென்னைய விட்டு bangloreku வந்து 2 வருஷமாச்சு ஆனா இது வரைக்கும் ஒரு வாட்டி கூட சென்னைக்கு போகல அதான் .. சரி மாமாவையும் அக்காவையும் கேட்டதா சொல்லு அப்றம் போன உடனே வந்துறாத ஒரு 10 நாள் இருந்துட்டு வா ஆபீஸ்ல நா சொல்லிகிறேனு சொன்னார் .. சரி மாமா நா சென்னைல இறங்குனப்புரம் போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன் .. பஸ் புறப்பட்டது .. என்னதான் சொர்கமாவே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் கழித்து அதுவும் போர் அடிக்க தொடங்கிவிடும் ..


அதேபோல் அந்த மழையும் போர் அடிக்க தொடங்கியது .. பக்கத்தில் உட்காந்திருன்தவன் ஏதோ ஹிந்தி பாட்டை கேட்டு கொண்டே வந்த வேலையே அவசரமாக தொடங்கினான் அதான் கொறட்டை விட்டு தூங்க தொடங்கினான் .. அவன பாக்கும்போதுதான் இந்தியா ஒரு சுதந்திர நாடுனே தோணுது .. ஒரு தமிழன் பேச்சு துணை இல்லாமல் பயணம் செய்வது என்பது கௌதம் மேனன் இங்கிலீஷ் கலக்காமல் தமிழ் படம் எடுப்பது போல ரொம்ப கஷ்டமான விஷயம் .. கண்ணை மூடி தூங்கலாம்னு நெனச்சா என்னோட சக சிட்டிசன் கொறட்டைய இப்ப 4 வது கியர்ல ஓட்டிக்கிட்டு இருந்தார் .. போன்ல full sound வச்சேன் .. பேச்சு துணைக்கும் ஆளில்ல, தூங்கவும் முடியல வேற வலி என்னோட வாழ்க்கைல நா பாத்த, அனுபவித்த விஷயங்கள மறுபடியும் மனசுல ஓட விட வேண்டியதுதான் ..


என்னோட பேரு பாலச்சந்தர் , ஆனா யார் என்கிட்ட பேர கேட்டாலும் சந்த்ருனுதான் சொல்லுவேன் .. மத்தவங்களும் என்ன அப்டிதான் கூப்பிடனும்னு ஆசை படுவேன் ..அதுக்கு காரணம் நா பாலச்சந்தர்னு என்னோட பேர சொன்னவுடனே k.பாலச்சந்தராநு? கேட்டுட்டு மொக்கையா சிரிப்பாங்க .. என்னோட வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நெனச்சா நா முதல்ல என்னோட பேர்தான் மாத்துவேன் .. என்னோட friendungalaam என்ன பாலானு கூப்பிடுவாங்க இல்ல சந்த்ருனு கூப்பிடுவாங்க ஒரே ஒரு நாதாரிய தவிர அவன் என்னோட ஸ்கூல் friendu அந்த நாய் மட்டும் என்ன வெருப்பெதுரதுகாகவே பாலச்சந்தர்நுதன் இன்னிக்கு வரைக்கும் கூபிடுறான் .. அதுவும் வெளிய திற்றேகு , ஹோடேல்குலாம் செமைய டிரஸ் பண்ணி கூலிங் glasslaam போட்டு கிட்டு பொண்ணுங்க முன்னாடி போகும்போது என்ன பாலச்சந்தர்னு சத்தம் போட்டு கூப்டு கேவல படுத்துவான் .. இதனாலேயே இந்த பேரு மேல எனக்கு செம கடுப்பு ..


ஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பையனோட வாழ்க்கைல இருக்கும் அதே ஆசை , கனவு , சந்தோஷம் , ஏமாற்றம்னு எல்லாம் என்னோட சின்ன வயசுலயும் நா அனுபவுசேன் .. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் காதல் வந்திருக்கும்னு சொல்ல முடியாது ஆனா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ல எல்லாருக்குமே ஸ்கூல்லையோ இல்ல வீடு கிட்டயோ யார்மேலயாவது ஒரு விதமான ஈர்ப்பு வரும் , அவங்க நம்மள விட்டு பிரிஞ்சிட்டா அது ஈர்பாகவே போய்டும் , ஆனா ஒரு வேல நம்ம கூடவே இருந்தா அந்த ஈர்ப்பு காதலா மாறிடும் எனக்கு நடந்ததும் அதுதான் ..... ………………
[+] 1 user Likes wealthbell's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
உன்னருகே நானிருந்தால் - by wealthbell - 20-08-2019, 09:58 AM



Users browsing this thread: 1 Guest(s)