Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூது

[Image: NTLRG_20190819192217505604.jpg]

சென்னை: மாநாடு படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளருக்கு நடிகர் சிம்பு தூது அனுப்பிருப்பதாக தெரிகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.


செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்த முடித்த சிம்பு உடனடியாக இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம் போல படப்பிடிப்பை தொடங்காமல் தவிர்த்து வந்தார்.

சிம்புவிடம் இருந்து கிடைத்த கால்ஷீட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பொறுமையாக காத்திருந்தார். இயக்குனர் வெங்கட்பிரவும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தவிர்த்து வந்தார்.

ஆனால் இருவரின் பொறுமையையும் சோதித்த சிம்பு, ஹன்சிகாவின் மகா படத்தில் முதல் கெஸ்ட் ரோலில் நடித்தார். பின்னர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். அப்போதும் மாநாடு படக்குழு சிம்புவுக்காக காத்திருந்தது.

ஆனால் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு வரவேயில்லை. சனி, ஞாயிறு நடிக்க மாட்டேன், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நடிப்பேன் என ஏகப்பட்ட கன்டிசன் போட்டார். இதனால் பொறுமையிழந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்பு, மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதுவும் தனது சொந்த தயாரிப்பில் அந்த படம் எடுக்கப்படும் என சிம்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியது. 

மாநாடு தயாரிப்பாளரை பயமுறுத்துவதற்காகவே சிம்பு இந்த அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷ் காமாட்சிக்கு போன் செய்த சிம்பு, படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவை தொடர்ந்து அவரது அம்மாவும், தயாரிப்பாளருக்கு போன் செய்து அதே கருத்தை கூறியிருக்கிறாராம். ஆனால் மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியதில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர், வெங்கட்பிரபுவிடம் மாநாடு கதை கேட்டு வருகின்றனர். அவர்களில் யார் முதலில் ஓகே சொல்கிறார்களோ, அவரை வைத்து படத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 20-08-2019, 09:05 AM



Users browsing this thread: 7 Guest(s)