Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ரெண்டு நாளா கமல் வனிதாவ வச்சு செஞ்சதுக்கு இதான் காரணமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக வனிதாவை கமல் டேமெஜ் செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக பெரும் களேபரமாக உள்ளது. மதுமிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் உள்ளது என்பதை அறிந்த வனிதா, அவரை தூண்டிவிட்டு டேமெஜ் செய்தார்.
இதேபோல் அபிராமி, தர்ஷன், ஷெரின், முகென் என பலரையும் தூண்டிவிட்டு வந்தார் வனிதா. இதன் வெளிப்பாடாக பிக்பாஸ் வீடு இரண்டாக பிளவுப்பட்டு ரணகளமாய் ஆனது.


[Image: vanitha65767567-1566204051.jpg]

விசாரித்த கமல்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய கடந்த இரண்டு நாட்களாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாய் நடந்த பிரச்சனை குறித்து விசாரித்தார்.
[Image: vanitha65767-1566204058.jpg]
வத்திக்குச்சி வனிதா
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களும் வனிதாவை போதும் போதும் என்னும் அளவுக்கு வச்சு செய்தார் கமல். வனிதாவை வத்திக்குச்சி என்றும், பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதை மற்றவர்களுக்கெல்லாம் தூண்டு கோளாய் இருக்கிறீர்கள் என்றும் கூறினார்.
[Image: kamal87-1566204082.jpg]
சிரித்து ரசித்த கமல்
கமல் கூறியபோதெல்லாம் வனிதாவின் முகம் மாறிவிட்டது. குறிப்பாக கஸ்தூரி வனிதாவை வத்திக்குச்சி என்று கூறியதை கமல்ஹாசன் சிரித்தப்படி ரசித்தார்.
[Image: sandy-1566204098.jpg]
தொங்கிபோனது
அங்கிருந்த பார்வையாளர்களும் வனிதாவை பேசவிடாமல் வெறுப்பேற்றினர். வனிதா பேசுவதற்கு வாய்திறந்த போதெல்லாம் கைத்தட்டி, கத்தி கூச்சலிட்டு அவரை ஒரு வழியாக்கிவிட்டனர். இதனால் வனிதாவின் முகம் தொங்கிபோனது.
[Image: vanith-1566204105.jpg]

அசிங்கப்படுத்திய கமல்
மேலும் வனிதா பேசும்போது கூட மக்கள் பக்கம் திரும்பி என்னங்க என மக்களிடம் கேட்டு வனிதாவை அசிங்கப்படுத்தினார் கமல். ஒவ்வொரு முறையும் கமல் அசிங்கப்படுத்தியதை வனிதா நன்றாகவே உணர்ந்தார் வனிதா.
[Image: vanitha6578-1566204089.jpg]
வத்திக்குச்சி என்ற கமல்
நீங்கள் எதுக்காக வந்தீங்க என்றபோது கூட வத்திக்குச்சி என்றே வனிதாவை குறிப்பிட்டார் கமல்ஹாசன். ஏனெனில் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, அதகளப்படுத்திய வனிதா, வெற்றி வாய்ப்புடன் இருந்த மதுமிதாவையும் திட்டம் போட்டு வெளியேற்றியுள்ளார்.
[Image: vanitha657-1566204035.jpg]
மதுவை விரட்டிய வனிதா
மதுமிதா கையை வெட்டிக்கொள்ளவும் வெளியேறவும் முக்கிய காரணமாக இருந்தவர் வனிதாதான் என கூறப்படுகிறது. மதுமிதாவுக்கு எதிராக மொத்த ஹவுஸ்மேட்ஸ்களையும் திருப்பிவிட்டு கேங்கை உருவாக்கி மதுமிதாவை தனிமைப்படுத்தி விரட்டியவர் வனிதா.

[Image: vanitha65767567657-1566204044.jpg]



இதுதான் காரணம்
வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியாளரை, நேர்மையாக விளையாடிய ஒரு போட்டியாளரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விரட்டிவிட்டுள்ளார் வனிதா. இந்த காரணத்தினாலேயே வனிதாவை கமல் இன்சல்ட் செய்ததாக கூறப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 20-08-2019, 09:01 AM



Users browsing this thread: 4 Guest(s)