Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது


[Image: 201908180130261607_The-twist-in-the-murd...SECVPF.gif]
[Image: fb-icon-art.png] Facebook [Image: twt-icon-art.png] Twitter [Image: mail-icon.png] Mail[Image: t-max-icon.png] [Image: t-min-icon.png] Text Size [Image: print-icon.png] Print
பெண் கொலையில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: ஆகஸ்ட் 18,  2019 05:45 AM
கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சாக்குமூட்டை தீயில் எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார், சாக்குமூட்டையில் பற்றி எரிந்த தீயை அணைத்து சோதனையிட்டனர். அப்போது அதில், ஒரு பெண் பிணம் முழுவதுமாக எரிந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்காநகரை சேர்ந்த சிவசங்கரன் (வயது 47) என்பவர், கடந்த மாதம் 9-ந்தேதி தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சூரியகுமாரியை (34) காணவில்லை என்று புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவசங்கரனும் மனைவியை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் சூரியகுமாரி குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிவசங்கரனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதையடுத்து அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் துப்பு கிடைக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் போலீசார் அவரிடம் செல்போனை தரும்படி கேட்டனர். ஆனால் அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறினார். இது போலீசாரின் சந்தேகத்தை வலுவடைய செய்தது.

இதனையடுத்து அவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன்படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் மூலம், தான்தோன்றிமலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மாதம் 8-ந்தேதி அது கொடைரோடு அருகே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கொடைரோடு போலீசாரை தொடர்புகொண்ட தான்தோன்றிமலை போலீசார் சிவசங்கரனின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததா? என்று விசாரித்தனர்.

அப்போது சாக்குமூட்டையில், எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றிய விவரத்தை அம்மையநாயக்கனூர் போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து சிவசங்கரனை பிடித்து தான்தோன்றிமலை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து, கொடைரோட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனது மனைவியின் உடலை சாக்குமூட்டையில் போட்டு வீசிச்சென்ற இடத்தை அடையாளம் காட்டியதுடன், எப்படி வீசிச்சென்றார் என்பது குறித்தும் போலீசாரிடம் நடித்து காட்டினார். பின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்ததும் அவரை கண்டித்தேன். ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை. அத்துடன் ஒரு வாலிபருடன் இணைந்து ‘டிக்-டாக்’ வீடியோவும் வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன்.

பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி படுக்கையறையில் வைத்துவிட்டு தூங்கினேன். பின்னர் அடுத்த நாள் காரில் அந்த சாக்குமூட்டை போட்டு கொடைரோடு அருகே, ரெயில்வே நகர் பகுதிக்கு வந்தேன். பின்னர் அங்குள்ள காலியிடத்தில் அந்த மூட்டையை வீசிச்சென்றேன். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான்தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன்.

மேலும் என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் நான் கொலை செய்ததை போலீசார் எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். சாக்குமூட்டையில் வீசிச்சென்றதாக சிவசங்கரன் கூறியதையடுத்து, யார் அந்த சாக்குமூட்டைக்கு தீ வைத்தது என்று போலீசார் விசாரித்தனர். அப்போது சாக்குமூட்டை இருந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் 14-ந்தேதி, யாரோ மர்ம நபர்கள் அதற்கு தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-08-2019, 09:30 PM



Users browsing this thread: 95 Guest(s)