Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி!

தொடர்ந்து ஆக்சன் கதையை கொடுத்து வந்த ஹரி சூர்யா கூட்டணி மீண்டும் கமர்ஷியல் படத்திற்காக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

[Image: suriya.jpg]கமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி!
நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் “காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யா இதில் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாக நடித்துள்ளார். நடிகர் ஆர்யா பிரதம மந்திரியுடன் மகனாக நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வெளிநாட்டில் மட்டுமே ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா39 படத்தில் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளனர். தற்போது இறுதிசுற்று இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். பைலட் ஒருவரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ஆறு”, “வேல்”, “சிங்கம்”, “சிங்கம் 2”, “சிங்கம் 3” என்று தொடர்ச்சியாக சூர்யாவிற்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

சூர்யா நடிப்பில் “காப்பான் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த மாதம் 21ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை லைகா தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் டீசரும், ஒரு பாடலும் இணையத்தில் வெளியாகி மக்களிடம் அமோக ஆதரவு பெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 18-08-2019, 11:09 AM



Users browsing this thread: 2 Guest(s)