18-08-2019, 11:07 AM
![[Image: mugen-12-1566043776.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/mugen-12-1566043776.jpg)
முகென் வனிதா விவகாரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் முகென் வனிதாவை அறைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அது தொடர்பான எந்தக் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை. எனவே, மதுமிதா தற்கொலை முயற்சியும் பொய்யாகத்தான் இருக்கும் என மக்கள் கருதினர். ஆனால், கமல் முன்பு அவர் கையில் கட்டுடன் நிற்கும் காட்சிகள் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை உறுதி செய்துள்ளன.
![[Image: madhumitha123-1566043708.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/madhumitha123-1566043708.jpg)
மது தற்கொலை முயற்சி
மதுமிதா ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கவினுடனான பிரச்சினையால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். இப்புரொமோவில் சேரனும் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
![[Image: madhumitha12-1566043715.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/madhumitha12-1566043715.jpg)
உண்மை தகவலா?
டிவிட்டரில் பலர் இது குறித்துப் பேசி வருகின்றனர். கடந்த வாரம் தான் மதுமிதா இறுதிச் சுற்று வரை செல்வார் என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். கமலும் மதுவைப் பாராட்டி இருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
first 5 lakhs viewed thread tamil