Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சென்னை, தமிழ் நாடு: மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 33.5 % சரிந்திருக்கிறது. அதே போல இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையும் 21.18% சரிந்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 10.77% சரிந்திருக்கிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையும் பலமாக 15% வரை சரிவு கண்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 34% விற்பனை சரிவு கண்டு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனையின் சரிவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த சரிவு Ashok Leyland நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை.
Ashok Leyland
Ashok Leyland நிறுவனம் கடந்த ஜூலை 2019 மாதத்தில் மட்டும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறதாம். ஆனால் ஜூலை 2018-ல் 15,199 வாகனங்களை விற்று இருக்கிறதாம். ஆக சுமார் 28 சதவிகித சரிவை சந்தித்து இருக்கிறது, Ashok Leyland. இப்படி வியாபார சரிவில் ஓடும் நிறுவனத்தில் செலவைக் குறைக்க, தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது Ashok Leyland நிர்வாகம். தன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS - Voluntary Retirement Service) அல்லது தங்கள் ஊழியர்களை பிரித்து விடும் திட்டம் (ESS - Employee Separation Scheme) இரண்டையும் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
[Image: men23-1566025134.jpg]
ஊழியர்கள்
Ashok Leyland நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் படி சுமார் 11,965 நிரந்தர ஊழியர்களும், சுமார் 16,900 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். இவர்களில் நிரந்தர ஊழியர்களுக்கு தான் மேலே சொன்ன விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS - Voluntary Retirement Service) அல்லது தங்கள் ஊழியர்களை பிரித்து விடும் திட்டம் (ESS - Employee Separation Scheme) போன்றவைகளை செயல்படுத்தப் போகிறர்களாம்.
[Image: ashokleyland3-1-1566025192.jpg]
 

உற்பத்தி இல்லை
கடந்த ஆண்டில் அனைத்து ரக வாகனங்களையும் சேர்த்து Ashok Leyland நிறுவனம் சுமாராக 30,000 வாகனங்களைத் தான் தயாரித்தார்களாம். ஆனால் Ashok Leyland நிறுவனத்தின் உற்பத்தித் திறன் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய முடியுமாம். இப்படி மொத்த உற்பத்தித் திறனில் வெறும் 30 - 40 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது கூடுதல் ஊழியர்களை வைத்துக் கொண்டால் செலவு அதிகரிக்கத் தானே செய்யும். அதனால் தான் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS - Voluntary Retirement Service) அல்லது தங்கள் ஊழியர்களை பிரித்து விடும் திட்டமாம் (ESS - Employee Separation Scheme.
யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்
Ashok Leyland நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் அல்லது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாமாம். இந்த திட்டம் அனைத்து நிரந்தர செயல் அதிகாரிகள் (Permanent Executive)-களுக்கும் பொருந்துமாம். விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு உள்ளே வராத பணியாளர்கள் Employee Separation Scheme-ன் கீழ் பிரித்து விடப்படுவார்களாம். வேலையில் இருந்து ஓய்வு பெறும் அல்லது வெளியேற்றப்படும் ஊழியர்களின் பணி அனுபவம் மற்றும் அவர்களின் பதவியைப் பொருத்து அதிகபட்சமாக 60 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கொடுக்கப்படுமாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-08-2019, 11:00 AM



Users browsing this thread: 103 Guest(s)