Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]ரஜினிக்கு... கிருஷ்ணராக மாறுகிறாரா குருமூர்த்தி?- ராஜகுருவின் லாஜிக் அரசியல்![/color]
[color=var(--title-color)]"உண்மையில், ரஜினிக்கு கிருஷ்ணராக இருந்து உபதேசம் செய்வது குரூமூரத்திதான். அந்த உபதேசம் எந்த அளவிற்குக் கைகொடுக்கும் என்கிற கவலைதான் எங்களுக்கு இருக்கிறது." - ரஜினி மன்ற நிர்வாகிகள்.[/color]
[Image: vikatan%2F2019-08%2F68c29ecf-8eb9-431e-b...2Ccompress][color=var(--meta-color)]Rajini - Gurumurthy[/color]
[color=var(--content-color)]“அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணன்- அர்ஜுனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்” என்று சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். தமிழக அரசியலில் 96-ம் ஆண்டு முதல் ஏதாவது ஒருவகையில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினியின் தற்போதைய வாய்ஸ், பரபரப்போடு விவாதத்தையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F303d35e9-9917-40f9-8...2Ccompress]
Venkaiah Naidu Book Release Function
[/color]
[color=var(--content-color)]ஜெயலலிதா - கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் பல்வேறு பரிணாமங்களுக்கு உட்பட்டு வருகிறது. அரசியல் பக்கமே வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல், அதிரடியாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து ஒரு தேர்தலிலும் களம் இறங்கிவிட்டார். இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று புரியாத புதிராக இருந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து, அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.[/color]
[color=var(--content-color)]ஆனால், அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் அவர் பக்கமிருந்து வரவில்லை. ஆனால், தமிழக அரசியல் நிலை குறித்தும், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியமைப்பு குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார், ரஜினிகாந்த். அவரின் கருத்துகள் பெரும்பாலும் பி.ஜே.பி-யின் சித்தாந்த அரசியலுக்கு நெருக்கமாக இருந்ததை வைத்து அவர் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பார் என்று ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F726dc791-c62e-406e-b...2Ccompress]
Modi - Rajini
[/color]
[color=var(--content-color)]ரஜினி தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை. குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியைத் தங்களுக்கு ஆதரவாக எப்படியும் களமிறக்கிவிடலாம் என்று எதிர்பார்த்தது, பி.ஜே.பி. ஆனால் கடைசிவரை அதற்குப் பிடிகொடுக்கவில்லை ரஜினி. இருபது ஆண்டுகள் தமிழக மக்களுக்கே பிடிகொடுக்காதவர், பி.ஜே.பி-க்கு மட்டும் உடனடியாகப் பிடிகொடுத்துவிட வாய்ப்பில்லை என்பதும் நிதர்சனம்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-08-2019, 10:53 AM



Users browsing this thread: 31 Guest(s)