screw driver ஸ்டோரீஸ்
கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!

[Image: RA+65.jpg]



அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! 'அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??' ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!

கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!

அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! 'மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??'

அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! 'எதையும் தொட்டுறாத' என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!

உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!

ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! 'கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..' என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!

"பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!" சூடாக சொன்னாள் மீரா.

அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! 'நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??' உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..

"மீ..மீரா.. மீரா.." என்றான் தவிப்பாக.

"ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??" மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.

"எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு...!!"

"இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!"

"இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!"

"ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!" மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது.

"இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!"

"எ..என்ன சொல்ற நீ..??"

"நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!"

அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!

"மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!"

"ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??" மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.

"ஆ..ஆமாம்..!!" அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.

"சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்.." படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..

"ஐ லவ் யூ..!!" என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.

"மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!"

என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!

என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!

"பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!"

சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 17-08-2019, 05:51 PM



Users browsing this thread: 10 Guest(s)