Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]`இந்தியன் 2' சேனாபதி இதைத்தான் பேசப்போகிறார்![/color]

[color=var(--title-color)]ஷங்கர் - கமல்ஹாசன் இயக்கத்தில் வெற்றிகண்ட `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிவருகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து படத்துக்கான வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. சுதந்தர தினமான நேற்று படத்தின் போஸ்டர் லுக், வெளியானது.[/color]
[Image: vikatan%2F2019-08%2Fd3cb1613-4d20-4e2a-8...2Ccompress][color=var(--meta-color)]இந்தியன் 2 ( கமல் ஹாசன் )[/color]
[color=var(--content-color)]பெரிய பொருள்செலவில் தயாராகவுள்ள `இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் லஞ்சம் சம்பந்தமான பிரச்னைகளை மையக்கருவாகக்கொண்டு `இந்தியன்' படம் தயாராகியிருந்தது. படமும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சமகாலத்துக்குக்கூட சரியாகப் பொருந்தும் `கல்ட்' ரக சினிமாவில் இப்படம் இணைந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F069c2c65-63b9-47b1-9...2Ccompress]
கமல் ஹாசன்
[/color]
[color=var(--content-color)]இப்போதிருக்கும் சூழலில் நாடு அதிகமாக சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள். இதை மையமாக வைத்துதான் `இந்தியன் 2'வை இயக்கத் திட்டமிட்டுள்ளார், ஷங்கர். தவிர, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான `நேர்கொண்ட பார்வை'யும் இதே விஷயத்தைதான் `நோ மீன்ஸ் நோ' எனப் பேசியிருந்தது. இதைத் தொடர்ந்து `இந்தியன் 2' படமும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 17-08-2019, 09:35 AM



Users browsing this thread: 2 Guest(s)