Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F9c2547a4-6211-47c7-9...2Ccompress]
பாலமுருகன்
[/color]
[color=var(--content-color)]ஏற்கெனவே எங்களிடம் உள்ள வேறு கார்களின் ஆவணங்கள் (ஆர்.சி புக்) அடிப்படையில் திருடப்பட்ட கார்களின் நம்பர் பிளேட், இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர் ஆகியவற்றை மாற்றுவோம். பிறகு அதை நல்ல விலைக்கு விற்றுவிடுவோம். மார்க்கெட்டைவிட குறைந்த விலைக்கு நாங்கள் கார்களை விற்றோம். இதனால் எங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. எங்களுக்குக் காலாவதியான கார்களின் ஆவணங்களைப் புதுப்பேட்டையில் உள்ள ஒருவரிடம் பணம் கொடுத்து வாங்குவோம். புதுப்பேட்டையில் கத்துக்கொண்ட தொழிலால் புது வாழ்க்கையைத் தொடங்கினோம். ஆனால், போலீஸிடம் மாட்டிக்கொண்டோம். நாங்கள் திருடும் கார்களை இன்ஜின், சேஸிஸ், நம்பர் பிளேட், பெயின்ட் என மாற்றிவிடுவதால் அதன் உரிமையாளர்களால்கூட கண்டுபிடிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.[/color]

[color=var(--content-color)]தற்போது சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. `அதிலிருந்து பாலமுருகனும் சிராஜுதீனும் எப்படித் தப்பினார்கள்?' என்ற கேள்வி போலீஸாருக்கு எழுந்துள்ளது. அதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது, ` காரைத் திருடுவதற்கு முன் நாங்கள் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதைத்தான் முதலில் பார்ப்போம். பிறகுதான் காரைத் திருடுவோம்' என்று கூறியுள்ளனர். கார் திருட்டு வழக்கில் முதல் தடவையாகக் கைது செய்யப்பட்ட பாலமுருகன், சிராஜுதீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fdbb4208d-7412-4f3d-9...2Ccompress]
சிராஜுதீன்
[/color]
[color=var(--content-color)]சுதர்சனன் புகார் கொடுத்து 3 மணி நேரத்தில் அவரின் காரை போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.
சென்னையில் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால், வீடுகளில் காரை நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனால்தான் கார்களை பலர், வீட்டுக்கு வெளியில் உள்ள சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கின்றனர். இதுதான் கார் திருடர்களுக்கு வசதியாக அமைந்துவிடுகிறது. சாலை, தெருக்களில் நிறுத்தப்படும் கார், பைக்குகளைத் திருடுவதற்கென்று சென்னையில் திருட்டுக் கும்பல் செயல்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-08-2019, 09:32 AM



Users browsing this thread: 65 Guest(s)