17-08-2019, 09:31 AM
[color=var(--title-color)]ஓனரே வந்தாலும் காரைக் கண்டுபிடிக்க முடியாது!' - மெக்கானிக் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்[/color]
[color=var(--title-color)]சென்னை புதுப்பேட்டையில் தொழிலைக் கத்துக்கிட்டு, புதுவாழ்க்கையைத் தொடங்கினோம்' என்று திருட்டுக் காரை விற்ற வழக்கில் கைதான மெக்கானிக் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.[/color]
[color=var(--meta-color)]பாலமுருகன்[/color]
[color=var(--content-color)]சென்னை திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் 6-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுதர்சனன் (28). கார் டிரைவரான இவர், குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காகச் சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.[/color]
[color=var(--content-color)]
திருடப்பட்ட கார்
[/color]
[color=var(--content-color)]புகாரின்பேரில், உதவி கமிஷனர் ரவி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் கொண்ட தனிப்படை டீம், சுதர்சனனின் காரைத் தேடிவந்தது. இந்தச் சமயத்தில் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அடையாறு பகுதியில் உள்ள மெக்கானிக் கடைக்கு போலீஸார் சென்றனர். அங்கு சுதர்சனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதன் நம்பர் பிளேட் (வாகனப் பதிவு எண்) மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து மெக்கானிக் கடையின் உரிமையாளர் பாலா என்கிற பாலமுருகனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.[/color]
[color=var(--content-color)]இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆலந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் சிராஜுதீன் (63) என்பவரைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``பாலமுருகனின் சொந்த ஊர் மன்னார்குடி. இவர், துரைப்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். கார் டிரைவர், மெக்கானிக் ஆகிய வேலைகளோடு கார் விற்கும் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார். இந்தச் சமயத்தில் புதுப்பேட்டையில் காலாவதியான கார்களின் பாகங்களை உடைத்து விற்பவர்களுடன் பாலமுருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குதான் மெக்கானிக் சிராஜுதீனைச் சந்தித்துள்ளார் பாலமுருகன்.[/color]
[color=var(--content-color)]
திருடப்பட்ட கார்
[/color]
[color=var(--content-color)]இருவரும் சேர்ந்து கார் பிசினஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காகப் புதுப்பேட்டைக்கு வரும் காலாவதியான கார்களின் ஆவணங்களை இருவரும் சேகரித்துள்ளனர். அடுத்ததாக, சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களைத் திருடத் தொடங்கியுள்ளனர். திருடப்பட்ட கார்களின் நம்பர் பிளேட் மற்றும் இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர்களைத் தங்களிடம் உள்ள கார் ஆவணங்களின் அடிப்படையில் மாற்றிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர், கார் விற்கும் இணையதளங்கள் மூலம் விற்றுப் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.[/color]
[color=var(--content-color)]சுதர்சனனின் காரையும் திருடிய இவர்கள், அதை விற்பதற்காக காரின் நம்பர் பிளேட் மற்றும் இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர்களை மாற்றவும் முடிவு செய்துள்ளனர். நம்பர் பிளேட்டை மாற்றப்போகும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் பாலமுருகனும் சிராஜுதீனும் தனிப்படையினரிடம் சிக்கிக்கொண்டனர். இவர்களிடமிருந்து 3 கார்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அந்தக் கார்களின் இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். இதனால் அந்தக் கார்களின் உரிமையாளர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தக் கார்களைக் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் அருகிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை ஓரத்தில் இருந்தும் திருடியதாகப் பாலமுருகனும் சிராஜுதீனும் தெரிவித்துள்ளனர்" என்றனர் விரிவாக.[/color]
[color=var(--content-color)]
திருடப்பட்ட கார்
[/color]
[color=var(--content-color)]பாலமுருகனின் மனைவி டீச்சராகப் பணியாற்றுகிறார். ஆனால், அவரின் குடும்பத்துக்கு பாலமுருகன், கார் திருடன் என்று தெரியாது. தற்போது அவர் கைது செய்யப்பட்ட தகவலையறிந்து பாலமுருகனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாலமுருகனும் சிராஜுதீனும் குறிப்பிட்ட கார் நிறுவனத்தின் சில மாடல் கார்களைத்தான் திருடிவந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, `செகன்ட் சேல்ஸ் கார்களில் இதற்குத்தான் நல்ல மார்க்கெட் உள்ளது' என்று கூறியுள்ளனர்.[/color]
[color=var(--content-color)]போலீஸாரிடம் பாலமுருகன் அளித்த வாக்குமூலத்தில், ``சென்னை புதுப்பேட்டைக்குத் தினமும் காலாவதியான கார்கள் விற்பனைக்கு வரும். அந்தக் கார்களை வாங்கி அதன்பாகங்களைத் தனித்தனியாகப் பிரித்து விற்றால் நல்ல வருமானம் கிடைக்கும். அந்தத் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். அப்போதுதான் மெக்கானிக் சிராஜுதீன் எனக்கு அறிமுகமானார். இருவரும் சேர்ந்து கார் பிசினஸில் ஈடுபடலாம் என முடிவு செய்தோம். ஆனால், விற்பனைக்கு கார்கள் கிடைக்கவில்லை. இதனால்தான் இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை காரில் சென்று நோட்டமிடுவோம். பிறகு, ஆள்நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் அந்தக் காரின் கதவுகளை மெக்கானிக் சிராஜுதீன் டூப்ளிக்கேட் சாவி மூலம் திறப்பார். அதன் பிறகு அந்தக் காரை திருடிக்கொண்டு அடையாறு இந்திரா நகரில் உள்ள மெக்கானிக் கடைக்குக் கொண்டு வருவோம்.[/color]

first 5 lakhs viewed thread tamil