Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. சென்னை ஹைகோர்ட் சாட்டை!

சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


[Image: high-court-chennai9-1565954804.jpg]


அந்த மனுவில், தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளதாகவும், இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு கல்விக்காக ஆண்டு தோறும், 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வரும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும், நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியாத நிலையில் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு, இதுசம்பந்தமாக அப்பாவு, 2018 செப்டம்பரில் அளித்த மனுவை, மனுதாரரின் கருத்தை கேட்டு மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என 2019 ஜனவரி 4ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மீது அப்பாவு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில் இதுவரை தன்னை அழைத்து கருத்தை கேட்கவில்லை எனவும், நடப்பு கல்வியாண்டு துவங்கி விட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுக்காததால் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு உத்தரவிட்டது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-08-2019, 09:27 AM



Users browsing this thread: 87 Guest(s)