Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#46
இரவு எட்டரை மணிக்கு வீட்டுக்குப் போனான் நவநீதன். அவன் போனபோது ஊர் மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. வீட்டுக்குள் திரி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அம்மா ஆட்டுச் சாலையை ஒட்டிய திண்ணை மேல் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில் கீழே தொங்கிய கால்களை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த கவிதா கேட்டாள்.!

'' எங்க மாமா போன. ?''

'' பசங்களோட பேசிட்டிருந்தேன் '' அவள் பக்கத்தில் போய் திண்ணையில் உட்கார்ந்தான்.

'' சாப்பிடறியா. ? போடட்டுமா..?'' என்று அவனைப் பார்த்தாள். 

'' இல்ல இரு.. கரண்ட் வரட்டும். நீ.. அம்மா எல்லாம் சாப்பிட்டிங்களா..?''

''ம்.. நாங்கள்ளாம் எப்பவோ..''

நவநீதனைப் பார்த்து விட்டு தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த கவிதாவின் அம்மா எழுந்து வந்தாள். அவனது மாமா வாசலில் ஒயர் கட்டிலை போட்டு குறட்டைச் சத்தத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

'' சாப்பிட்டாச்சா அத்தை..?'' நவநீதன் தன் அத்தையைப் பார்த்துக் கேட்டான்.

'' ஆச்சு நவநி. நீ சாப்பிடலியா ?''

'' கரண்ட் வரட்டும் அத்தை. அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க..?''

'' அதுக ரெண்டும் தூங்கிருச்சுனு நெனைக்கறேன். பாரு.. இது ஒண்ணு இருக்கே.. இதுதான் தூங்காம கோட்டான் மாதிரி உக்காந்துட்டிருக்கு..'' என்று கவிதாவை கிண்டல் செய்தாள் அத்தை.

'' அம்மா '' எனக் கத்தினாள் கவிதா ''நான் கோட்டான்னா. நீ.. நீ தேவாங்கு..''

சிரித்தபடி கீழே தரையில் உட்கார்ந்தாள் அத்தை.
'' இப்படி எல்லாம் பேசறதுக்குத்தான் பள்ளிக் கொடத்துல சொல்லித் தராங்க போலருக்கு. ''

'' ஆமா.. போ.. !!''

நவநீதன் குறுக்கிட்டுச் சொன்னான்.
'' இவ காலேஜ்ல ஏதோ டூர் போறாங்களாமே அத்தை..''

'' ஆமா சொன்னா..! உன்கிட்ட சொல்லி கேக்க சொன்னாளா.?''

கவிதா உடனே அவனை ஒட்டினாள். 
''பாத்தியா மாமா. இதான் எங்கம்மா கிட்ட எனக்கு சுத்தமா புடிக்காது. யாரு எது சொன்னாலும் உடனே ஒரு பழி போட்றனும்.''

நவநீதன் சிரித்துவிட்டு அத்தையிடம் சொன்னான்.
'' இல்லத்த.. அவள்ளாம் அப்படி சொல்லல. நான்தான் அவள போகச் சொன்னேன்.''

'' உங்க மாமன்தான் போக வேண்டாம்.. அப்படி இப்படினு சொல்லுச்சு நவநி..''

'' அவ போய்ட்டு வரட்டும்த்தே... மாமாகிட்ட நான் பேசிக்கறேன்..''

'' ம்.. சரி என்னமோ.. நீயாச்சு. உன் மாமனாச்சு.. உன் மாமன் மகளாச்சு..! நீங்க முடிவு பண்ணா சரி.. '' என அத்தை சொல்ல..

நவநீதன் அதை சாதாரனமாகத்தான் நினைத்தான். ஆனால் தன் அம்மா எதைச் சொல்கிறாள் என்பது கவிதாவுக்கு தெரிந்தது. 

'' லூசு அம்மா. சும்மா ஒளறாத. பேசாம இரு..'' என்றாள்.  ஆனாலும்  அவள் மனசுக்குள் ஏதோ ஒன்று நிகழவே செய்தது.!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 16-08-2019, 08:32 PM



Users browsing this thread: