Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#39
நவநீதன் விடை பெற்றுப் போன பின் தோழிகள்  இருவரும் பேச ஆரம்பித்தனர்.

"நம்ம ஊர் பசங்கள்ளயே இவன் ஒருத்தன்தான்டி ரொம்ப டீசண்ட்டு..'' என்றாள் பிரமிளா.

'' ம்.. அவன் வெளியூர்ல போய் இருந்ததால இப்படி இருக்கான். நம்ம ஊர்க்குள்ள இருந்துருந்தான்.. அவனும் நாசம்தான். இப்ப பாரு.. இங்க வந்து இந்த பொறுக்கிகூட சேந்துட்டானா.. இனி என்ன மாதிரி ஆவானு சொல்ல முடியாது '' என்று நவநீதனுக்காக மிகவும் கவலைப் பட்டாள் திவ்யா.. !!!

''ம்.. சரிதாண்டி.. இனி எவளுக்கு குடுத்து வெச்சிருக்கோ..'' பிரமிளா கொஞ்சம் துணிந்தே தன் பீலிங்கை வெளியிட்டாள்.

'' எதுக்குடி.. ?''

'' வேற எதுக்கு.. ? அவனுக்கு பொண்டாட்டியா வரதுக்குத்தான்..'' என்று சிரித்தாள்.

'' நீ ஏங்கற போலிருக்கு.?''

'' ம்.. ஆசை இருக்கு.. ஆனா என்ன பண்றது.. யோகம் வேணுமே..''

'' ஓஓஓஓ.. அவ்வளவு தூரம் வந்தாச்சா.. ? ரொம்ப நல்லாருக்குடி.. !!! சரி.. ட்ரை பண்ணித்தான் பாரேன்..!!!''

''யாரு.. நானா.. ??? நல்லா சொன்ன போ. அவனுக்குலாம் என்னை புடிக்குமாடி. ?''

'' ஆமா.. அவனுக்குன்னு இல்ல.. எவனுக்குமே உன்னை புடிக்காது..'' 

'' ஏ.. போடி ரொம்பத்தான் போற..? நான் அவன் ரேஞ்சை சொன்னேன்.! ஏன் உன் அண்ணன் இப்ப கூட என்னைப் பாத்து அந்த வழி வழிஞ்சிட்டுத்தான்  போறான் பாத்தே இல்ல?"

'' ச்சீ.. அவனையெல்லாம் நான் ஒரு மனுசனாவே மதிக்கறதில்ல. அவனுக்கு உன் மூஞ்சி.. மொகறைனு ஒரு மசுரும் தேவை இல்ல. நீ ஒரு பொட்டச்சி அது போதும் அவனுக்கு..! உனக்கு பல்லு நீண்டிருந்தா என்ன... கண்ணே இல்லாம போனா என்ன..?'' என்று திட்டினாள் திவ்யா.

'' ஹா.. ஹா..! சரி உனக்கு ஏன்டி உன் அண்ணன் மேல இப்படி ஒரு வெறுப்பு..?'' 

'' அவனல்லாம் மனுஷனாடி.. ? ஒரு தங்கச்சிகிட்ட பேசற மாதிரியா என்கிட்ட பேசுவானு நினைக்கறே. நீயே பாத்துருக்க இல்ல. படு சில்லறை மாதிரிதான் பேசுவான். அதான் அவனை எனக்கு புடிக்காமயே போயிருச்சு.. !! பத்தாதுக்கு அந்த சிறுக்கிய போய் லவ் பண்றானே.. த்தூ கருமம். இவனை விட அவளுக்கு வயசு பெருசு.. எப்படித்தான்.. கருமம்.. நெனச்சாலே எனக்கு குமட்டுது.. '' 

'' யாரு ரேவதியை சொல்றியா..? நெஜமா அவளை லவ் பண்றானாடி உன் அண்ணன்..?'' 

'' ஆமா டெய்லி நைட்ல வேற போன் பண்ணி கொஞ்சறா மாதிரி இருக்கு. இவனும் சிரிச்சு சிரிச்சு கொஞ்சுவான் பாரு.. எனக்கு அப்படியே அடி வயிறு எல்லாம் பத்திகிட்டு எரியும். ''

'' எனக்கென்னமோ நம்பிக்கை இல்லைடி. இன்னும் கொஞ்ச நாள்ள.. நீ வேணா பாரு.. மேட்டர் முடிச்சிட்டு அவளை கழட்டி விட்டற போறான் அன்பு..''

'' தூ.. கருமம்.! வெக்கமா இல்ல..? நீ என்னடி இப்படி பச்சையா பேசற..?''

'' ஹே.. நீதான்டி என்னை விட பேசற..? சரி.. சரி அதை விடு.. நாம என்ன பேச ஆரம்பிச்சோம்.. ? ம்ம்ம்.. இந்த நவநி பத்தி.. அப்ப இனிமே ஆளு இங்கதானா.?'' 

'' ஆமான்டி.. இங்கதான். அதும் கே ஜிக்கு வேலைக்கு போகப் போறானாம் அதான் எனக்கு கவலையா இருக்கு..''

'' என்னடி இப்ப..  நீ பீல் பண்ற போலருக்கு.. ?''

'' ஏன்.. பண்ணக் கூடாதா.. ?'' என சிரித்தபடி கேட்டாள் திவ்யா.

'' யேய்.. எப்பருந்துடி.. ?'' எனக் கண்டு பிடித்து விட்டதைப் போலக் கேட்டாள் பிரமிளா. 

'' ஏய் ச்சீ.. இது அந்த பீலிங்லாம் இல்லை. அவன் கெட்டுப் போயிரக் கூடாதேன்ற பீலிங்ஸ்.. '' 

''நம்பிட்டேன்.. '' 

'' நம்பாட்டா போ மூடிட்டு. '' 

'' ஆஹ்.. ஹா.. வாழ்த்துக்கள்டி நீ ட்ரை பண்ணு.. உனக்குலாம் ஓகே ஆக சான்ஸ் இருக்கு...''

'' அட ச்சீ.. போடி பேசாம.. இது வெறும் அக்கறைதான்.. '' திவ்யா நன்றாகவே வெட்கப் பட்டாள். 

''மத்தபடி எதுவும் இல்ல. ''

'' மத்தபடி எதுவும் இல்லேன்னாலே இருக்குனுதான் அர்த்தம்டி கண்ணு..!! ரொம்ப சீன் போடாத.. ஆமானு ஒத்துக்க.. நான் ஒண்ணும் சொல்லலை.. ''

'' சரி சரி விடு.. அதான் நான் சீன் போடறேனு தெரியுதில்ல. இனி நவநி என் ஆளு.. ஓகேவா.? நீ ஏதாவது வாலை ஆட்டினே.. மவளே அறுத்துருவேன்.. '' என்றாள் திவ்யா.. !!!


ஆட்டுக்கல்லில் அரிசியை போட்டு மாவறைத்துக் கொண்டிருந்தாள் கவிதாவின் அம்மா. வெளியில் இருந்து வந்த கவிதாவைப் பார்த்து.. 
'' ஒரு கை புடி வா..'' என அழைத்தாள்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் 'போம்மா ' என ஒரே வார்த்தையில் உதறித் தள்ளியிருப்பாள். ஆனால் இன்று.. இப்போது அவள் அப்படி சொல்லாததற்கு ஒரு காரணம் இருந்தது..!

அம்மா பக்கத்தில் போய் நைட்டியை சுருட்டி பிடித்து உட்கார்ந்தாள். அம்மாவுக்கு மாவாட்ட உதவினாள்! !

'' ஏம்மா.. '' என ஆரம்பித்தாள் கவிதா. 

'' ம்..?'' என்றாள் அவள் அம்மா.

'' மாமா நல்ல கலராம்மா ?'' 

'' எந்த மாமா..?'' 

'' நம்ம மாமாதான். நவநி மாமாவோட அப்பா..?'' என விளக்கம் கொடுத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தாள் அம்மா.
''ஏன்டீ. ?'' 

அம்மா பார்த்த பார்வையும் கேட்ட தோரணையும் கவிதாவுக்கு கூச்சத்தைக் கொடுத்தது.
''இல்ல.. நவநி மாமா நல்லா கலராத்தான் இருக்கு.. பெரிய மாமாதான் கொஞ்சம் கலரு கம்மி.. அதான் கேட்டேன். நவநி மாமா அவங்கப்பா மாதிரியானு.. ?''

'' ஆமா.. அவங்கப்பன் கொஞ்சம் கலருதான். ஆளும் பாக்க நல்ல வாட்ட சாட்டமா.. இருக்கும் நவநி அவங்கப்பன உருச்சு வெச்சு பொறந்துருக்கானுதான் எல்லாரும் சொல்லுவாங்க. அப்பனும் மகனும் அப்படியே அச்சுல வாத்த மாதிரி இருந்தா அப்பனை புள்ளை முழுங்கிருவானு சொல்லுவாங்க.. அப்படித்தான் ஆச்சு... கடைசில..''

நவநீதனின் அப்பா இறந்த கதை கவிதாவுக்கும் தெரியும். இருந்தாலும் இப்போதும் அதை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள். 
'' எப்படிம்மா மாமா ஏமாந்துச்சு.. ?'' 

'' மப்புல வீர விளையாட்டு.. விளையாடி ஏமாந்ததுதான். ஆத்துல தோட்டா போட போய் திரிய பத்த வெச்சிட்டு  கடைசிவரை தண்ணிக்குள்ள வீசாம கைலயே புடிச்சிட்டுருந்து.. கடைசி நுணில வெச்சி.. ரஜினி வீசறாப்பல வீசறது உன் மாமானுக்கு கை வந்த கலைனு சொல்வாங்க. ஆனா அன்னிக்கு கெட்ட நேரம் திரி சரியில்லயோ என்னமோ.. பத்த வெச்சதும் சர்ருனு புடிச்சு.. டமால்னு வெடிச்சிருச்சாம்.. அப்பவே ஆளும் காலி..'' 

'' அப்ப.. நவநி மாமாக்கு என்ன வயசுமா இருக்கும் ?'' 

'' ஒன்றை வயசு.. சரியா..! ஒன்றை வயசுல அப்பன முழுங்கிட்டான். அவன் ஜாதகத்துலயே அப்படி இருக்கு.'' 

'' மா.. பெரிய மாமா பண்ண தப்புக்கு நவநி மாமா என்னமா பண்ணும்.. ?'' 

'' ம்.. அதும் சரிதான்.. '' என்றுவிட்டு மெல்லக் கேட்டாள் அம்மா.  '' உனக்கு உன் மாமன புடிச்சிருக்காடி ?'' 

'பக்' கென்றிருந்தது கவிதாவுக்கு. திகைப்பாக அம்மாவைப் பார்த்தாள். 

'' என்ன நீ.. இப்படி கேக்கற..?'' 

'' ஏன்டி நான் கேட்காம வேற யாரு கேப்பா..? அவன் உனக்கு மொறைதான. ?''

'' மா.. '' எனக் கத்திச் சிணுங்கினாள்.
''போ பேசாம..'' 

'' கட்டிக்கறியா அவனை .?'' அம்மா மிகவும் இயல்பாகக் கேட்டாள். 

'' ச்சீ.. ஏம்மா இப்படி லூசாட்ட பேசற..?''

'' ஏன்டி அவனுக்கு என்ன குறைச்சல்..?'' 

'' அய்யோ...! போ லூசு அம்மா..! மாமா என்னை எல்லாம் அப்படி நினைக்கவே இல்ல. '' 

'' உன்கிட்ட சொன்னானா.. ?'' 

'' இல்ல.. ஆனா மாமா கிருத்திய லவ் பண்ணுச்சு அது வேணா தெரியும்'' 

'' அடக் கருமமே.. சொன்னானா அவன்.. ?''

'' ம்.. ஆனா பாவம். மாமா மட்டும்தான் ஒன் சைடா லவ் பண்ணுச்சு. அவ பண்ணவே இல்லையாம்..'' 

'' அட கண்றாவியே.. அது வேறயா.. ? ஆனா நானும் நினைச்சேன்தான். அங்கயே போய் செட்டிலாகி அவளையே கட்டிக்குவானோனு. சரி இப்ப என்ன சொல்றான் ?''

'' இப்பல்லாம் ஒண்ணுல்ல.. எல்லாம் விட்டாச்சு.. '' 

'' உன்னை ஏதாவது லவ் பண்ற மாதிரி தெரியுதா.. ?'' 

'' அம்ம்ம்ம்மாமா...!!'' கத்தினாள் கவிதா. 

'' ஏன்டி கத்தற.. சனியனே..? என்ன சொல்லிட்டேன் இப்ப..? சரி நீயே அவன கட்டிக்க.. அது உங்கப்பனோட ஒரு பெரிய கனவு.. !!'' என அம்மா சொன்னதைக் கேட்ட கவிதா ஆத்திரத்தில் ஆட்டு உரலை அம்மா பக்கம் தள்ளி விட்டு சட்டென எழுந்து நின்றாள்.

'' நீயே ஆட்டித் தொலை. என்னை கூப்பிடாத.. '' எனச் சொன்னவள் வேகமாக வீட்டுக்குள் போய் விட்டாள்.. !!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 15-08-2019, 10:41 PM



Users browsing this thread: 14 Guest(s)