15-08-2019, 10:03 AM
"ஆஸ்டல் பீஸ் கட்ட பணம் இல்ல... அதனால் திருட்டில் ஈடுபட்டோம்- காதலர்கள் வாக்குமூலம்.!"
தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் கூப்பிடு தூரத்தில் நிகழ்ந்த வழிப்பறித் திருட்டில் இளம் காதலர்களை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தேனாம்பேட்டை பார்த்தசாரதி பேட்டையை சேர்ந்த பிரசன்னா, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி ஆகியோர் நேற்று முன்தினம் ஓட்டுனர் பயிற்சிக்கு சென்றுவிட்டு, தங்களது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தேனாம்பேட்டை சுந்தரராவ் சாலையில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி, கண்ணிமைக்கும் நேரத்தில் பிரசன்னாவின் கைப்பையை பறித்துச் சென்றுவிட்டார். அதில் செல்போனும், பணமும் இருந்துள்ளது. தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கும் சம்பவம் நடந்த இடத்திற்கும் இடையே உள்ள தூரம் 50 மீட்டர் கூட இருக்காது.
மர்ம ஆசாமி கைப்பையை பறித்து பின்னால் அமர்ந்திருந்த தனது காதலியிடம் கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், வண்டியின் பதிவு எண் மூலம் வழிப்பறித் திருட்டில் ஈடுபட்ட ராஜூவையும், அவரது காதலி ஸ்வேதாவையும் கைது செய்தனர்.
ஆனால், அவன் வழிப்பறி செய்தது எனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்திருக்கிறார் ஸ்வேதா. ஆனால், சிசிடிவி காட்சிகளை போலீஸார் காட்டிய உடன் ஒத்துக் கொண்டார். கல்லூரியில் படிக்கும் ஸ்வேதாவுக்கு விடுதிக் கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டது. இதனால், முதல் முறையாக வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளான் ராஜூ. ஆனால், கைதேர்ந்த கொள்ளையனாக இருக்கலாம் என்ற அடிப்படையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil