14-08-2019, 10:11 PM
புருஷன்
நான் காணபிரென்ஸ் விட்டு வெளியே வந்ததும் முதலில் லாபிக்கு போனேன். அங்கே விக்ரம் ஒரு சோபாவில் உட்கார்ந்து இருந்தான். அவன் இன்னும் ஆஃபீஸ் உடையில் இருந்தான். நான் அவனை நோக்கி நடக்க அவன் என்னை பார்த்து எழுந்து நின்றான்.
"ஹலோ, விக்ரம், வந்து ரொம்ப நேரம் ஆகுதா?"
"இல்லை சார், நான் இப்போது தான் வந்தேன் நீங்களும் வந்துட்டிங்க."
அவன் எனும் கை குடுக்க நாங்க கைகுலுக்கினோம். அன்று போல அவன் கைகுலுக்கும் போது அவன் பலத்தை காட்ட முயற்சிக்கவில்லை.
"இதை கொடுக்க தான் உன்னை அழைத்தேன், இதோ," என்று சுமித்த கொடுத்த கிபிட் அவனிடோம் கொடுத்தேன். "சரி எனக்கு டையேற்டா இருக்கு, இட் வாஸ் எ லோங் டேய்," என்று புறப்பட இருந்தேன்.
அவன், "சார் கொஞ்சம் இருங்க, உங்ககிட்ட பேசணும், உட்காருங்க."
இவன்கிட்ட பேசுவதும் எனக்கு என்ன இருக்கு. என்னுள் இவ்வளவு சந்தேகம் எழுப்பிய ஒருவனை மறுபடியும் பார்த்து அவன்கிட்ட என்ன தான் இருக்கு என்ற ஒரு சிறுபுத்தி தானத்தில் அவனை சந்திக்க சுமித்தவிடம் ஒப்புக்கொண்டேன். பார்த்துட்டேன், நான் கவலை படும் அம்சங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தது, இனி என்ன பேச இருக்கு. இருந்தாலும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று சோபாவின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தேன்.
"சார் முதலில் நீங்க இந்த உதவி செய்ததும் நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்."
ஒன்னும் சொல்லாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
"சார் எனக்கு சுமித்த ரொம்ப பிடிக்கும், முதல் முறையாக எனக்கு ஒரு பெண் மேல் விருப்பம் வந்திருக்கு. அவளுக்கும் அதே விருப்பம் இருக்கும் என்று நம்புகிறேன்."
என்ன கதைவிடுகிறேன், முதல்முறையாக ஒரு பெண்ணின் மேல் ஆசை வந்ததா? இதை நான் நம்பனும் மா?
"சார் உங்கள் பார்வையில் நீங்க என்ன நினைக்கிறீங்க என்று புரியுது. இதுவே தான் என் நண்பர்கள் சொல்வார்கள், உனக்கு என்னடா பிரச்சனை, நீ நினைத்த பெண்ணை மடக்கிடுவ."
"ஏன் நீ அப்படி செய்வதில்லையா, கல்யாண வீட்டில் நீ எல்லா பெண்களுடன் ரொம்ப சகஜமா பேசுவதை பஸ்ர்த்தேன்," என்றேன் என் மனைவி உள்பட என்று மனதில் நினைத்துக் கொண்டேன்."
"அது தான் சார் பிரச்சனை, என் நண்பர்கள் எல்லோரும் உசுப்பு ஏத்த. அவர்கள் முன்னையில் ஹீரோ மாதிரி பெண்களுடன் பேச வேண்டிய நிர்பந்தம் வரும், அனால் என் உள்ளுக்குள் என்ன உதறல் இருப்பதை நான் தான் அறிவேன்."
"அப்படியா பா இதை நம்ப முடியலையே."
"அதுதான் சார் யாருக்குமே நம்ப மாட்டீங்கிறார்கள், அவர்கள் முன்னாலே என் ஈகோ காப்பாத்த நானும் பெண்கள் விஷயத்தில் வல்வவன் போல காட்டிக்கொள்வேன். நம்ப மாட்டீங்க, இதுவரை நான் எந்த பெண்ணிடமும் ப்ரொபோஸ் செய்ததில்லை."
"அது சரி பா இதை ஏன் இப்போ என்னிடம் சொல்லுற."
அவன் முகத்தில் தயக்கம் தெரிந்தது. "எல்லாம் சுமித்த விஷயமாக தான் சார். அவளை பார்த்தபோதே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிப்போச்சி. அவளுக்கும் என்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன். அனால் என் காதலை சொல்ல பயமாக இருக்கு."
"என்ன பயம் வேண்டி இருக்கு, அவள் தான் கிபிட் கொடுத்து சிக்னல் கொடுக்குறாளே."
"ஆமாம் சார் நானும் அவளுக்கு என் மேல் விருப்பம் இருக்கு என்று நினைக்கிறேன். அனால் இது வரை எங்கள் மெஸேஜ் வெறும் நட்பு ரீதியாக தான் இருக்கு. ஒரு வேலை உன்னை நல்ல தோழனாக தான் நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டாள் என்றால் நான் நொந்து போவேன்."
அவன் வார்த்தைகளில் சின்சியாரிட்டி இருக்க என்று சரியாக யூகிக்க முடியவில்லை.
"அதனால தான் சார் அவள் என்னை பற்றி உங்களிடம் என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுறேன். என்ன அவள் உங்கள் வீட்டில் இப்போது இருக்கிறாள். உங்கள் மனைவி உதைவியை கூட அங்கே கல்யாண வீட்டில் நாடினேன். ஒரு பெண்ணாக அவுங்க சுமித்த எண்ணத்தை அறிந்துகொண்டு என்னிடம் சொல்லுங்கள் என்று நம்பினேன்."
"ஹ்ம்ம், சோ பவனி உன்னிடம் என்ன சொன்னாள்."
"எங்க சார் சொன்னாங்க, கல்யாணம் முடிந்து அந்த நாளுக்கு பிறகு எங்கே அவங்களை சந்திக்க வாய்ப்பு வந்தது, எங்கே சுமித்தவிடம் என்னை பற்றி பேசினங்களா என்று அறிந்துகொள்வது."
"சுமித்த மெஸேஜ் அனுப்பும் போது உன் விருப்பத்தை மெஸேஜ் மூலம் சொல்ல வேண்டியது தானே?"
"அதன் சார் நான் பற்பத்துக்கு தான் பந்த, இந்த காதல் விஷயத்தில் கொலை. அவள் என்னை நிராகரித்தால் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நான் அவளை பற்றி தான் கனவு காண்கிறேன். உங்களுக்கே தெரியும் அவள் அழகை மிஞ்சிய பெண் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க."
இவன் உண்மையிலயே சுமித்த மீது ரொம்ப காதல் கொண்டுவிட்டான் என்று தோன்றுது.
"ஐயோ சார் அதுக்காக நான் உங்கள் மனைவியை பற்றி குறைவாக பேசுறேன் என்று கோப படாதீங்க. உங்களுக்கு அவுங்க மிஞ்சிய பெண் இருக்க மாட்டாங்க அனால் எனக்கு என் சுமித்தவுக்கு நிகர் யாரும் இல்லை. அவளுக்கு என் மேல் காதல் இருந்தால் என்னைவிட லக்கி ஆண் உலகில் இல்லை."
"சார் அவள் என்னை பற்றி எதுவும் பெர்சனலாக சொன்னாளா? எனக்கு வாய்ப்பு இருக்கா?"
பதில் தெரிய அவன் முகத்தில் உள்ள ஈகர்நெஸ் பார்க்கும் போது இது உண்மை என்று தோன்றியது. செயற்கையில் இந்த ஆர்வம் காண்பிக்க முடியாது.
"அவள் உன்னை லவ் பண்ணுறாள், இதை அவள் பெற்றோரிடமும் சொல்லிவிட்டாள். அநேகமாக நீ தான் முதல் ஆதி எடுக்கணும் என்று காத்திருக்காள் போல."
அவன் முகத்தில் அப்போது மலர்ந்த சந்தோஷத்தை பார்க்கும் போது இவன் உண்மையிலே சுமித்தவை ரொம்ப லவ் பண்ணுறான் என்று உரிஜினம் ஆனது. அவனால் உட்கார முடியவில்லை. அவன் கைகள் நடுங்கியது.
"சார் ரொம்ப தாங்க்ஸ் சார். நான் அப்படியே வனத்தில் பறப்பது போல் இருக்கு. நான் உடனே போய் அவளுக்கு போன் செய்கிறேன், ம்ம்..இல்லை இல்லை வேண்டாம் நான் நேரில் ப்ரொபோஸ் செய்யணும் போனில் கூடாது."
அவன் என்ன செய்வது என்ற பதற்றத்தில் துடிப்பதை பார்க்கும் போது எனக்கே சிரிப்பு வந்தது. இவனை பற்றியா நான் இவ்வளவு நாட்கள் கவலை பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பவனியும், அவினாஷும் லாபி உள்ளே வந்தார்கள். நான் அங்கே இருப்பதை முதலில் பவனி கண்டுகொண்டாள். அவினாஷை இழுத்து கொண்டு என்னை நோக்கி நடந்து வந்தாள். அவளை பார்த்ததும் விக்ரம் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.
"சார் உங்க வாய்ப்பும் வந்திருக்காங்களா? நீங்க தான் கண்பிரின்ஸ் வரீங்க என்று சுமித்த சொன்னாள்."
சுமித்த நேராக வந்து என்னிடம், "உங்க கண்பிரின்ஸ் இன்னைக்கு முடிஞ்சிடுச்சா? வேற ஈவென்ட்ஸ் எதுவும் இல்லையே? அப்புறம் விக்ரம் நின்றுகொண்டு இருப்பதை கவனித்து, "இது யார்...ஓ நீங்க விக்ரம் தானே? சுமித்த கொடுத்த கிபிட் வாங்க வந்திங்களா?"
"யெஸ், மேடம் சார் உடன் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தேன். நீங்க நல்ல இருக்கீங்களா? நீங்க இங்கே எப்படி?
நான் குறிக்கிட்டேன், "அவள் பெங்களூர் வந்ததில்லை அதனாலே கூட்டிட்டு வந்தேன். அவளும் இங்கே சுற்றி பார்க்கட்டும்மே."
"பாவம் சார் அவுங்க, நீங்க கண்பிரின்ஸ்ஸில் இருக்கிங்கா, அவுங்க தனியாக போய் சுற்றி பார்க்கணும். எனக்கும் ப்ரொஜெக்ட் டைட் ஷேடூல்லில் இருக்கு இல்லை என்றால் நான் லீவ் போட்டு உதவி செய்வேன்."
இவன் உதவி தேவை இல்லை. "அவள் தோழி இங்கே இருக்கிறாள், அவளை கூட்டி செல்கிறாள்."
"ஆமாங்க கிர்ஜா எங்களை பல இடத்துக்கு கூட்டி சென்றாள்."
விக்ரம் குறுக்கிட்டு, "என்ன பெயர் சொன்னிங்க கிர்ஜாவா?
பவனி சொன்னாள், "ஆமாம் அவங்கள உங்களுக்கு தெரியும்மா?"
விக்ரம் ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் பெயரை சொல்லி, "அங்கேவா அவுங்க தாங்குறாங்க," என்று கேட்டான்.
இப்போது பவனி அவனை வியப்புடன் பார்த்தாள்," ஆமாம் கிர்ஜா உங்களுக்கு தெரியும்மா?"
"கிர்ஜா அண்ணி எனக்கு நல்ல தெரியும்."
நான் இப்போது விக்ரமுடன் கேட்டேன், "கிர்ஜா உனக்கு அண்ணியா?"
"இல்லை சார் உண்மையான அண்ணி கிடையாது, அவங்க கணவர் ரஹீல் நான் அண்ணா என்று அழைப்பேன், அவுங்கள அண்ணி என்று அழைப்பது வழக்கம். ரொம்ப நெருங்கிய நண்பர்கள் மற்றபடி உறவினர் கிடையாது. அவுங்க எதிர் அபார்ட்மெண்டில் இருப்பதால் வந்த பழக்கம்."
"வாட்ட? நான் இன்றைக்கு மதியத்தில் இருந்து அவள் அபார்ட்மெண்ட் இல் தான் இருந்தேன், உங்களை பார்க்கவில்லையா?"
"அப்படிங்கள மேடம், இன்னைக்கு எனக்கு ரொம்ப வேலை நான் இன்னும் வீட்டுக்கு போகல. IT வேலை அப்படி தான் மேடம், எப்போ வேலை அதிகம், எப்போ பிரீயாக இருப்போம் என்று தெரியாது."
இவன் கிர்ஜா வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கானா? என்ன ஒரு கோஇன்சிடேன்ஸ். எனக்கு மீண்டும் சந்தேகம் மெல்ல ஏல துவங்கியது, அனால் எதுவும் தப்பாக இருந்திருந்தால் இதை என்னிடம் மறைத்து இருப்பார்களே. மேலும் இருவரும் உண்மையாக சார்ப்ரைஸ் ஆனார்கள் என்று போல தான் இருந்தது. நாங்கள் இன்னும் சில நேரம் பேசிக்கொண்டு பிறகு அவன் விடைபெற்றான்.
இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் கிர்ஜா குடும்பத்தோடு ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் முன்பு தான் ரஹீல் வெளியூரில் இருந்து வந்தார். சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் சொன்னார்.
"ஏன் வேலை அடிக்கடி வெளியூர் போக வேண்டியதாக இருக்கு. என் மனைவி தான் பாவம், எப்போதும் வீட்டில் அடைந்து கிடக்கிறாள்."
"நான் வெளியூர் போவதில்லை அனால் வேலை அதிகம் ஹாலிடே போகும் வாய்ப்பு குறைவவு. பயணிக்கும் அதே நிலை தான்."
"ஆமாம் சார் நாம வெளியே போகிறோம், அவுங்களுக்கு என்ன என்ஜைமென்ட் இருக்கு. அதான் வருஷத்தில் ஓரிரு முறை கிர்ஜா மற்றும் அவள் தோழிகள் ஹாலிடே ட்ரிப் போவார்கள். நானும் பேர்மிஷ்ஷென் கொடுப்பேன்."
கிர்ஜா அப்போது," அதுனால் தான் டியர், அடுத்த ட்ரிப் பவானியை அழைத்து போகலாம் என்று நினைக்கிறோம். உங்களுக்கு ஏணி ஒப்ஜேக்ஷென் மிஸ்டர் மோகன்?"
பவனி என் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்தாள். நான்," மன்னிக்கணும், எங்க குடும்பங்களில் மனைவிகளை தனியாக போக விடுவதில்லை. நாங்க கொஞ்சம் கண்சேர்வேடிவ் கோவை பெங்களூர் போல லிபெரல் இல்லை."
"பட் ஷீ இஸ் நோட் கோயிங் அலோன். நாங்க 4 , 5 பெண்கள் இருப்போம்."
"சாரி மிஷேர்ஸ் கிர்ஜா அது எங்க குடும்பத்தில் ஒரு மாதிரி பேசுவாங்க. எங்களுக்கு வீட்டு பெண்களை குடும்ப உறுப்பினரகள் இல்லாதவர்களுடன் அனுப்புவது பழக்கம் இல்லை. பிலீஸ் அதை பற்றி இனி பேச வேண்டாம்."
என் முடிவில் நான் உறுதியாக இருப்பதை கண்டு கிர்ஜா மேலும் வற்புறுத்தவில்லை. டின்னர் முடிந்ததும் கர்நாடக்க ஸ்டேட் அசம்பலி கட்டிடத்தின் வழியாக டிரைவ் செய்து சென்றோம். இரவில் அது அழகாக லைட் செய்ய பட்டிருந்தது. எங்கள் அறைக்கு வந்த பிறகு நான் பவானியை பார்த்து கேட்டேன்.
"நான் உனக்கு ட்ரிப் போக அனுமதி கொடுக்காததுக்கு வரத்தும் இல்லையே?"
அவள் என் முகத்தை பார்த்து, "எங்கே அப்படி கேக்கிறிங்க? நீங்க சொல்வது தான் சாரி. நம்ம குடுபத்துக்கு இப்படி பட்ட பழக்கம் ஒத்துவராது. மேலும் அறிமுகம் இல்லாதவர்களுடன் போவது எனக்கு கம்போர்ட்டெபெல் ஆகா இருக்காது."
அவள் முகத்தில் எந்த வருத்தமும் தெரியவில்லை. அவளும், அவினாஷும் ஊரை சுற்றியதில் களைப்பாக இருந்தார்கள். முழு நாள் மீட்டிங்கில் நான் களைப்பாக இருந்தேன். நாங்கள் வெகு விரைவில் உறங்கிவிட்டோம்.