Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Bigg boss 3 tamil: ஆரம்பிச்சது வனிதா.. ஆனா ஜெயிலில் மாட்டிகிட்டது கஸ்தூரி
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஜொலிக்கிறது கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஹோட்டல் என்று மாற்றம் செய்யப்பட்டு வனிதா விஜயகுமார் விருந்தினராக வந்திருக்கிறார்.
வந்ததுமே பல விஷயங்களை பேசியவர், கடைசியாக அபிராமி, முகேன் விஷயத்தை ஆரம்பிச்சு வச்சார். உன் மேல தப்பில்லையா முகேன் என்பது போல முதல் நாள் ஆரம்பிச்சு வச்ச விஷயம், நேத்து பத்திகிட்டு எரிஞ்சுது.
இன்று ஜெயிலில் இருக்கார் கஸ்தூரி. இப்படி ப்ரோமோவில் காண்பித்து இருக்கிறார்கள் என்றாலும், உண்மையிலும் நேற்று ஹவுஸ் மேட்ஸிடம் கெட்ட பெயர் வாங்கி மாட்டிகிட்டது கஸ்தூரிதான்.
[Image: vanitha-1-1565770963.jpg]

தோத்து போயிட்டேன் ஷெரீன்
வந்த விஷயத்தை மறந்து இப்போ தோத்து போயிட்டேன் ஷெரீன் என்று அபிராமி அழுவது பாவமாகத்தான் இருக்கிறது.நேற்று மீண்டும் முகேன் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிய வைக்க அபிராமி முயற்சி செய்து கொண்டு இருக்கையில், கஸ்தூரி நின்று கொண்டு நீ பேசு..இப்போ நீ பேசு என்று நீயா நானா ஷோ மாதிரி வாய்ப்பு கொடுக்க கடுப்பாகி போனார்கள் ஹவுஸ் மேட்ஸ். முதலில் நீங்க உட்காருங்க. இது ஒண்ணும் டிவி ஷோ இல்லை என்று வனிதா மற்றும் ஹவுஸ் மேட்ஸ் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.


[Image: mugen567-1565771036.jpg]
 
[color][size][font]
முகேன் எப்போதும்
எப்போதும் முகேன் கோவத்தில் அதை போட்டு உடைப்பது, இதை போட்டு உடைப்பது என்று இருப்பது எங்களுக்கு பிடிக்கலை .உங்களுக்கு பிடிக்குதா பிக்பாஸ். இதை வனிதா கேட்டது சரியாகத்தான் இருந்தது. தவிர நேற்று சேரை தூக்கிப் போட்டுவிட்டு, அபிராமியை அடிப்பது போல வந்த முகேனின் செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதோடு, கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.[/font][/size][/color]

[Image: vanitha-167-1565770956.jpg]
 
[color][size][font]
கஸ்தூரி காக்கா
வனிதா அக்கா கூட சரியாத்தான் கேட்டாங்க. புதுசா வந்திருக்கே ஒரு காக்கா..அதுதான் ரொம்ப ஆட்டம் காட்டுது. நீயா நானா ஷோ மாதிரி நடத்துதுன்னு சாண்டி, முகேன்,கவின் மூணு பேரும் பேசிக்கறாங்க. அது படி பார்த்தால் வனிதா ஆரம்பிச்சு வச்ச விஷயம் ஓகேதான். அதை ஊதி பெரிசாக்கினது கஸ்தூரிதான் என்பது போல ஆகிப் போச்சு கதை.
[/font][/size][/color]

[Image: vanitha-16768-1565770947.jpg]
 
[color][size][font]

விஷயம் சூடு
வனிதா வந்ததும் பல விஷயங்கள் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு.அது மட்டும் இல்லமால் கஸ்தூரியிடம் எதிர்பார்த்தது புஸ்ஸுன்னு போயிருச்சு. இப்போ ப்ரோமோ பார்க்கவே மக்கள் விஜய் டிவியையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பார்க்க போனால் விருந்தாளியாக வந்த வனிதா கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு, ஹவுஸ் மேடாக தங்கி விடுவார் போலும்[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 14-08-2019, 05:12 PM



Users browsing this thread: 5 Guest(s)