screw driver ஸ்டோரீஸ்
உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!

அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. 'இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்' என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!

"தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!" என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.

எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!

"எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!" தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,

"ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" பவானி தைரியமூட்டினாள்.

அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??"

"அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??"

"ம்ம்.. வந்தது வந்துட்ட.. 'Art of Living' class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??"

தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!

"தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!" கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.

"உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!" மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.

"இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!" அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.

வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!

"ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!" - அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.

"தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it's too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!" - அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.

"ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!" - வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.

மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!

"ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??"

"ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!"

"ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!"

"எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!" அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-08-2019, 10:21 AM



Users browsing this thread: 8 Guest(s)