Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: z1604-750x506.jpg]
வந்தார்... கதைத்தார்... முடித்தார்! முகேன் - அபி காதலுக்கு ஒரே மாலையில் 'மாலை' போட்ட வனிதா
Bigg Boss Tamil 3, Episode 51 Written Update: தர்ஷனோ, 'ஏன் முகேனை மட்டும் கார்னர் பண்றீங்க?' என்று வரிந்து கட்டி நின்றவர், 'எல்லா.
Bigg Boss Tamil 3 Episode 51 : ‘வந்தால் மகாலக்ஷ்மியே… என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…’ என்ற கமல்ஹாசனின் பாடலை 51வது நாள் காலை ஒலிக்கவிட்டதிலேயே, தற்போது வீட்டின் நிலைமையை, கச்சிதமாக சொல்லியுள்ளார் பிக்பாஸ்.
‘செத்துக் கெடுத்தான் சிவனாண்டி’-னு ஒரு பழமொழி இருக்கு. அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் மக்களால் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கும் வனிதா.
நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி – முகேன் இடையே காதல் பஞ்சாயத்து நடத்தி, வீட்டையே ரணகளாமாக்கிஇருக்கிறார். எந்த முகேனை துரத்தி துரத்தி அபிராமி காதலித்தாரோ, அதே முகேனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட வைத்து, இருவரும், இனி பேச்சு வார்த்தையில்லை என்ற சொல்லும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டார்.
அதிலும், அபிராமியை நோக்கி முகேன் ஆவேசமாக நாற்காலியை தூக்கியது எல்லாம் வேற ரகம். அடிதடி சண்டையாகி போலீஸ் கேஸில் முடிந்திருக்க வேண்டிய அந்த சம்பவம், மற்ற ஆண் போட்டியாளர்களின் தடுப்பணையால் தப்பித்தது.
பிரச்சனை என்னவெனில், ‘வெளியில் எனக்கு ஒரு நெருங்கிய தோழி இருக்கிறாள் என்று முகேன் சொல்லியும், அபிராமி அவரிடம் நெருங்கிப் பழகினார். அது தவறு தான். ஆனால், அவ்வாறு ‘நீ ஏன் நெருங்கிப் பழக விட்ட? அவள் உன் மேல் ஏறி விளையாடுவதெல்லாம் நட்பா? அவளை ஏன் அந்தளவுக்கு உன்னில் உரிமை எடுத்துக் கொள்ள அனுமதிச்ச?. அபிராமி தவறு செஞ்சான்னா, நீயும் தப்பு செஞ்சிருக்க’ என்பதே வனிதாவின் குற்றாச்சாட்டு.
சேரனும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார்.
ஆனால், முகேனோ ‘நான் தோழி இருக்கிறார் என்று சொல்லியும், அவள் என்னிடம் நெருங்கிப் பழகும் போது, அவளை நான் தடுக்கவா முடியும்? அல்லது முகத்திற்கு நேராக என்னிடம் பேசாதே என்று எப்படி சொல்ல முடியும்?’ என்ற ரீதியில் அந்த பஞ்சாயத்தில் தன வாதத்தை முன்வைத்துக் கொண்டிருக்க, அவருக்கு சாண்டியும், தர்ஷனும், கவினும் பக்க பலமாக நின்று ஆதரவு கொடுத்தார்கள்.
குறிப்பாக, எதற்கும் ரியாக்ஷன் காட்டாத சாண்டி, முகேன் விஷயத்தில் முதன் முதலாக டெரர் முகம் காட்டியிருக்கிறார். ‘ஏன் தேவையில்லாமல் எல்லாவற்றையும் கிண்டுகிறீர்கள்?’ என்று வனிதாவை நோக்கி அவர் சொன்ன வாக்கியத்தில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை பிக்பாஸ் ‘மியூட்’ செய்யும் அளவுக்கு டென்ஷனாகிப் போனார்.
தர்ஷனோ, ‘ஏன் முகேனை மட்டும் கார்னர் பண்றீங்க?’ என்று வரிந்து கட்டி நின்றவர், ‘எல்லா மேட்டரையும் சொல்லு… சொல்லு’ என்று முகேனிடம் திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டிருந்தார்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்ம கஸ்தூ அக்கா, முகேன் – அபி பஞ்சாயத்தை கோபிநாத் ரேஞ்சுக்கு ‘இப்போ நீங்க பேசுங்க’ , ‘இப்போ நீங்க உங்க தரப்பை சொல்லுங்க’-னு மைக் நீட்ட, ‘ஏங்க இது நீயா நானா ஷோ இல்லீங்க.. பேசாம உட்காருங்க என்று ஓப்பனாகவே கவின் சொல்ல, வடகிழக்கு பக்கம் ஒதுங்கினார் கஸ்தூரி.
முகேன் மேல் தவறு உள்ளது வனிதா கேள்வி எழுப்பியது சரிதான் என்றாலும், அதனை சம்பந்தப்பட்ட இருவரின் மானம் காற்றில் பறக்கும் அளவுக்கு செய்திருக்க தேவையில்லை. ஆனால், அந்த பஞ்சாயத்தில் ‘மய்யத்தில்’ இருப்பது வனிதாவாச்சே!.. பின்னே, ரணகளம் இல்லாமல் எப்படி?
எது எப்படியோ, காதல், செண்டிமெண்ட், ஒன்சைட் கேம் என்று போட்டியே இல்லாமல் சென்றுக் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டில், பக்காவாக தயார் செய்யப்பட்ட வனிதா, தனது வழக்கமான 50 ரூபாய் கூலிக்கு 5000 ரூபாய் உழைப்பு ஃபார்முலாவில் வீட்டை தக தகக்க வைத்திருக்கிறார். நம்ம ஆடியன்ஸும் அதைத்தானே எதிர்பார்க்குறங்க!!
ஆனா, கடைசி வரை அந்த ‘எல்லா மேட்டரையும்’ முகேன் சொல்லவேயில்லையப்பா!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 14-08-2019, 10:00 AM



Users browsing this thread: 31 Guest(s)