13-08-2019, 07:20 PM
39.
அவளது குரலில் உண்மை இருந்தது! பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பி விட்டாள்! அவர்களுக்குத் தெரிந்திருந்தது, இனி அவர்கள் வாழ்வில், அவள் வரப்போவதில்லை என்று!
ராஜா வெளியே சென்று விட்டு, வீடு நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது! ப்ரியா அமைதியாக சோஃபாவில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
சாப்ட்டீங்களா?
அமைதியான அவள் பதிலில், ராஜாவே கொஞ்சம் ஆச்சரியப்பட்டான்.
ம்…
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்! இப்பப் பேசலாமா?
தான் சொல்ல வேண்டியதை, அவளேச் சொல்லவும், அவன் இன்னும் ஆச்சரியம் அடைந்தான்.
ம்ம்.. சொல்லு!
உ.. உங்களுக்கு எவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியும்.
நம்ம வெட்டிங் டே ல இருந்து!
அவள் கண்கள் விரிந்தது. அவள் நினைத்தது போன்றே, அன்று, அவன் முன்பே வந்திருக்கிறான்.
அன்னிக்கு, முன்னாடியே வந்துட்டீங்களா?
ஆமா! வீட்டுக்கு 4.30 க்கு நானும், மைதிலியும் வீட்டுக்கு வந்தோம்!
மைதிலியோட எதுக்கு?
நீ, சாயங்காலம் வீட்டுக்கு வர்றப்ப உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு, கொஞ்சம் டெகரேட் பண்றதுக்கும், கேக் வாங்கி வைக்கிறதுக்கும் அவளோட ஹெல்ப் கேட்டிருந்தேன். அதான்…
ஓ… இந்த நிலையிலும் அவளுக்கு, அவர்கள் மேல் பரிதாபம் வந்தது! பாவம்! எவ்வளவு பெரிய அதிர்ச்சியாய் இருந்திருக்கும் இருவருக்கும்! வெட்டிங் டே அன்று, அத்தனை நிராகரிப்பிற்க்குப் பின்னும், அவளுக்காக வந்தவனுக்கு அவள் செய்ததுதான் என்ன???
பெரு மூச்சு விட்டவள், சோ, நெக்ஸ்ட் என்ன ப்ளான் என்றாள்!
டைவோர்ஸ் தான்! நீ தேவையில்லாம பிரச்சினை பண்ற எண்ணம் இரு…
அவன் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் குறுக்கிட்டாள்.
அவசியமில்லை… நீங்க எடுக்கும் எந்த முடிவுக்கும், எல்லா முடிவுக்கும் நான் உடன் படுறேன். ஜஸ்ட், என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க! தட்ஸ் எனஃப்…
ராஜாவே ஆச்சரியப்பட்டான்!
அதன் பின் காரியங்கள் துரிதமாக நிறைவேறின. ப்ரியா சொன்ன மாதிரியே, கம்ப்ளீட் சப்போர்ட் கொடுத்தாள். ராஜா கொடுத்த டாக்குமெண்ட்களில் படிக்காமலேயே கையெழுத்திட்டாள்.
அவள் எந்த லாயரிடமும் கன்சல்ட் செய்யவில்லை. அவன் காசு தருவதாகச் சொன்ன போது கூட வேண்டாம் என்றாள். அவளாகவே இன்னொன்றும் சொன்னாள், கோர்ட் ஆர்டர் வந்தவுடன் தானாகவே வீட்டை விட்டு சென்று விடுவதாகச் சொன்னாள்.
இடைப்பட்ட காலங்களில் அவள் நடவடிக்கை ராஜாவை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. அவர்களுக்குள் உடலுறவும், பெரிதாக பேச்சும் மட்டும்தான் இல்லை.
ஆனால், இயல்பான ஒரு மனைவி செய்யும் எல்லா வேலைகளையும் அவள் செய்தாள். அவனுக்காக சமைத்தாள், அவன் அதிக வேலையிலிருக்கும் போது அவனுக்காக பாலோ, காஃபியோ கொடுத்தாள். வெளியே சொல்லும் போது, எங்கு செல்கிறாள், எப்பொழுது வருவாள் என எல்லாம் தெரிவித்தாள், மிக மிக அவசியமாக ஏதாவது தேவையிருப்பின், அவனை உடன் வரும்படிக் கேட்டாள்! இதையெல்லாம், அவள் முன்பு கூடச் செய்ததில்லை!
எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதாவது மைதிலி ராஜாவைத் தேடி வந்தால், அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு அறைக்கோ, அல்லது வெளியேவோ சென்று விடுவாள்!
அவளது செயல்களால் குழம்பிய ராஜாவே, வேண்டுமென்றே அவளைக் காயப்படுத்தச் சொன்னான்.
என்ன, திருந்துன மாதிரி நடிக்கிறியா? இதுக்கெல்லாம் நான் மயங்கிட மாட்டேன்!
அவள் அடிபட்டாற்போல் அவனைப் பார்த்தாள். பின் சொன்னாள். என்னைக் காயப்படுத்தனும்னு நினைச்சு, நீங்க உங்க தகுதியை குறைச்சுக்கனுமா என்ன? நீங்க ராஜாவாவே இருங்களேன்!
ராஜாவே வாயடைத்துப் போயிருந்தான். மைதிலியிடம் கூட சொல்லியிருந்தான்! அவளை, இன்னும் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று!
ப்ரியாவிடம் எப்போதும் ஒரு திமிர் இருக்கும், அது அவளுக்கு கொஞ்சம் கம்பீரத்தைக் கொடுக்கும். அவளுக்கு விருப்பமில்லாதவற்றை அவளால் நினைத்தாலொழிய, யாராலும் செய்யவைக்க முடியாது!
அவளுடைய இந்தக் குணங்கள் சற்றே முறைபடுத்தப்பட்டிருந்தால், அவளுடைய வளர்ப்பு இன்னும் ஒழுங்காக இருந்திருந்தால், அவளுக்கு இது தனி கம்பீரத்தையும், அழகையும் கொடுத்து, அவளையும், அவள் வாழ்வையும் இன்னும் அழகுபடுத்தியிருக்கும். மாறாக தேவையற்ற பிடிவாதமும், அகங்காரமும், அவளையும், அவளது வாழ்க்கையையும் முழுக்கச் சிதைத்து விட்டது!
ப்ரேமுக்கு சில தேவைகளிருந்தது. முக்கியமாகப் பணம்! சமூகத்தின் முன் கொஞ்சம் நல்லவன் வேஷம், பணத்திற்க்காக நல்ல மருமகன் வேஷம், அலுவலகத்தில் வல்லவன் வேஷம் என்று பல முகங்களும், தேவைகளும் இருந்தது.
ப்ரியாவிற்கு அப்படி எதுவும் பெரிதாக இல்லை. ராஜாவிடம் இருந்த பணமோ, அவனது ஆண்மையோ அவளை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை. அளவுக்கு மீறிய பிடிவாதம், அவனது அன்பைக் கூட உணர விடவில்லை. குடும்பத்தின் முன்பும் எந்த வேஷமும் பெரிதாக அவள் போட்டது இல்லை. நண்பர்கள் வேண்டும் என்று பொய்யாக நடிக்கவில்லை. யாருக்காகவும், பெரிதாக எதையும் பார்த்ததில்லை அவள்!
தேவைகள் இருக்கும் மனிதனை வளைப்பதோ, அடிப்பதோ எளிது! அந்தத் தேவையின் மேல் கை வைத்தால் போதும்! ஆனால், தேவைகளற்ற மனிதனை சாய்ப்பது அவ்வளவு எளிதல்ல! அந்த மனதை வெல்வதும் சாமன்யமானதல்ல. அப்படித்தான் ப்ரியாவை வெல்ல முடியாமல் யோசித்தான் ராஜா!
ப்ரேமைப் போல், லாயரைச் சந்திப்பது, யார் மூலமாவது தூது விடுவது, இப்படி செய்ய வேண்டாம் என்றெல்லாம் ப்ரியா கெஞ்சவேயில்லை! அவனைப் போல் காசு வேண்டும், சொத்து வேண்டும் என்றும் கெஞ்சவில்லை, அதே சமயம், இது வரையிலும், எதற்க்காகவும், அவள் மன்னிப்பும் கேட்கவில்லை.
அதன் பின் ராஜா அவளை அதிகம் பேசுவதில்லை. ராஜாவிற்கே கொஞ்சம் கடுப்பாகிவிட்டது! இப்பொழுது கூட ஆட்டம் காட்டுகிறாளே என்று!
ஆயிற்று!
கோர்ட் ஆர்டரும் வந்துவிட்டது! அமைதியாக எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்த அவள், இப்பொழுது வீட்டை விட்டு நிரந்தரமாகச் செல்லப் போகிறாள். இடையில் அவள் வேலையை ரிசைன் செய்த செய்தியும் வந்திருந்தது. அவளது பெற்றோரை பார்க்க முயன்ற அவளிடம், அவள் தந்தை பேசவேயில்லை!
இப்பொழுதும் அவள் எங்கு போகிறாள், என்ன செய்யப் போகிறாள் என்று கூடத் தெரியவில்லை! அவள் கிளம்பும் சமயத்தில் மைதிலியும் அங்கு இருந்தாள். ப்ரியாவின் இந்த நடவடிக்கைகளை, மனநிலையை அவளும் அறிந்திருந்தாள்.
அவளைக் காயப்படுத்துவதற்க்கென்று வேண்டுமென்றே ராஜா சொன்னான். போனாப் போகுதுன்னு, 5 லட்சமோ, 10 லட்சமோ கொடுக்கலாம்னு கேட்டேன். நீதான் வேணாம்னுட்ட!
என்ன இருந்தாலும் 5 வருஷம் என் கூட இருந்திருக்க, அதுக்கு ஒரு ரேட்டு போட்டுக் கொடுக்கனும்ல! இப்பக் காசும் வேணம்னுட்டு, வேலையையும் ரிசைன் பண்ணிட்டு எங்கப் போற?
அவள் அமைதியாக அவனைத் திரும்பி பார்த்தாள். பின், ஒன்றும் சொல்லாமல், எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்!
அவளுடைய அமைதி ராஜாவையே கொஞ்சம் ஆட்டியது. எதற்கும் அசராத அவளது திமிர் மேல் கொஞ்சம் கோபமும், இது மட்டும் நல்ல முறையில் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்சினகள் வந்திருக்காதே என்கிற வருத்தமும் இருந்தது.
கடுப்பில் இன்னும் ஏதோ சொல்ல முயன்ற அவனை, மைதிலி தடுத்துவிட்டாள்.
இறுதியில் சொல்லிவிட்டுக் கிளம்ப முயன்ற ப்ரியாவின் கையைப் பிடித்து மைதிலி நிறுத்தினாள். பின், ப்ரியாவின் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
என்ன இருந்தாலும், இவரு எனக்குக் கிடைக்க முக்கியக் காரணம் நீதான் ப்ரியா. அதுக்கே, நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!
அடித்து விட்டாள். மைதிலி, மிகச் சரியாக அடித்தாள்.
ப்ரியா இழந்தது என்ன என்பதை மிகச் சரியாக சுட்டிக்காட்டினாள். இருந்தும், ப்ரியா அமைதியாக இருந்தாள்.
ப்ரியாவின் கண்களைப் பார்த்து ஆத்மார்த்தமாகவேச் சொன்னாள்! நீ நல்லவதான் ப்ரியா, உன் வளர்ப்பும், உன்னோட சில பிஹேவியரும் கொஞ்சம் வேற மாதிரி இருந்திருந்தா இன்னிக்கு உனக்கு இந்த நிலையில்லை! இதெல்லாம் நீயே வரவெச்சுகிட்டது!
நீ யாரு, உனக்கு என்னதான் வேணும், ஏன் இப்பிடி இருக்கோம்? இன்னும் எத்தனை நாள் இப்பிடி இருப்போம்னு என்னிக்காச்சும் நீ யோசிச்சிருக்கியா? இல்லை இப்பிடி இருக்கிறதுனால நீ எதையாவது சாதிச்சிருக்கியா?
ப்ரியா உள்ளுக்குள் உடைய ஆரம்பித்தாள்.
நீ இப்ப, அப்படி யோசிக்குறன்னு எனக்குத் தெரியும். ஆனா, இப்ப நினைச்சாலும் உன்னால இழந்ததை அடைய முடியுமா என்ன?
துரோகத்தையும், ஏமாற்றத்தையும் சந்திச்ச எங்களைச் சுத்தி, எங்க சப்போர்ட்டுக்கு, நிறைய பேரு இருக்காங்க. ஆனா பெருசா சாதிச்சிட்டதா, எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறதா நினைச்சிகிட்ட, உன் பக்கத்துல, உனக்குன்னு யாரும் இல்லியே, அது ஏன்னு யோசிச்சியா?
நீ ரொம்ப தைரியசாலின்னு, உன்னை நீயே நினைச்சுகிட்டது, இவரு உன் திமிரான நடவடிக்கைகளை பொறுத்துகிட்டதுனால…வாய்க்கு வந்ததையெல்லாம், அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்னு தெரிஞ்சும் பேசுறதுக்கு பேரு தைரியம் இல்லை.
எவ்ளோ பிரச்சினை வந்தாலும், அந்தக் கடமைக்காக, வலியையும் ஏமாற்றத்தையும் தாண்டி, துணைக்கு நிக்குறதுக்கு பேருதான் தைரியம்! அப்ப, நீ தைரியசாலியா, இல்ல இவரு தைரியசாலியா?
ப்ரியாவிற்க்கு பயமும் தவிப்பும் வந்தது. ராஜாவையே ஆட்டிப் படைத்தவளால், அவளது மனதை புரிந்து கொண்ட மைதிலியிடம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தனிப்பட்ட முறையில எங்க வாழ்க்கையில, திரும்ப உன்னைப் பாக்குறதை நான் விரும்பலை ப்ரியா. ஆனா….
நிறுத்தி கேப் விட்ட மைதிலியையே பார்த்தாள் ப்ரியா!
உங்கப்பா ரொம்ப மனசு நொந்திருக்கார் ப்ரியா. உடனே, அவங்க உன்னை ஏத்துகலைன்னாலும், அவிங்க கடைசிக் காலத்துல, ஃபுல் சப்போர்ட்டா இருக்க வேண்டியது உன் கடமை! அந்தக் கடமையைனாச்சும் நீ கண்டிப்பா நிறைவேத்தனும். உங்க அம்மாவையும் சேத்துதான் சொல்றேன். அம்மாவோட அருமை எனக்குதான் நல்லாத் தெரியும். அவிங்களுக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா? அவங்களைப் பத்தினாச்சும் நீ கொஞ்சம் யோசிச்சு பாக்கனும்.
நீ எங்க போற, அடுத்து என்ன பண்ணப் போற, எதுவும் எங்களுக்குத் தெரியாது!
ஆனா, உன் வாழ்க்கையில ஒரு வேளை உனக்கு பண ரீதியாவோ, வேற வேலைக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னாலோ, வேறெதாவது அவசிய உதவி தேவைன்னாலோ கண்டிப்பா எங்க சப்போர்ட் உனக்கு இருக்கும். இவரும் செய்வார். நான் சொன்னா கண்டிப்பா செய்வார்!
ப்ரியா முழுதாக உடைந்தாள். பூடகமான பேச்சுதான். இனி ராஜா, என் சொந்தம் மட்டுமே என்ற அறிவிப்பும் இருந்தது!
ஆனால், அதையும் மீறி மைதிலி, ப்ரியாவின் தந்தைக்காக யோசித்தது, ஓரளவு தன்னுடைய மாறிய மனநிலையை புரிந்து கொண்டது, எல்லாவற்றையும் தாண்டி அவள் காட்டிய அளவற்ற அன்பும், கருணையும் அவளை அசைத்து விட்டது!
ராஜாவின் சீண்டல் பேச்சுக்கள் கூட தகர்க்க முடியாத அவளது திமிரை, தராத வலியை அவளது கருணையும், மன்னிப்பும் வழங்கியது! அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது! இந்தக் கருணைக்கு நான் தகுதியானவளா???
மைதிலியையே பார்த்தவள், அவளை மெல்ல அணைத்தாள் ப்ரியா! பின் பிரிந்தவள், மைதிலியின் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்!
ஆல் தி பெஸ்ட் மைதிலி! யூ டிசர்வ்டு இட்! சாரி ஃபார் எவ்ரிதிங்! என்று அவளது கன்னத்தை வருடினாள்!
பின் பெருமூச்சு இட்டவள், ராஜாவைப் பார்த்துச் சொன்னாள். கையெடுத்து கும்பிட்டாள். ஐ யம் சாரி! ஐ யம் ரியலி வெரி சாரி! முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க! ஆல் தி பெஸ்ட் டூ போத் ஆஃப் யூ! பை!