13-08-2019, 09:45 AM
'என் இதயத்தை கவர்ந்தது 'பிக்பாஸ் 3' தர்ஷன் மட்டும் தான்' - சனம் ஷெட்டி ஏக்கம் !
![[Image: Untitled-1_74.jpg]](https://image.nakkheeran.in/cdn/farfuture/dsfe_RtdD9SssSBYc7bU1HxINn9GMPLl2OuUxMudppM/1565596769/sites/default/files/inline-images/Untitled-1_74.jpg)
'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, இணைந்து நடித்து, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட நாயகியும், இப்படத்தின் தயாரிப்பாளருமான நடிகை சனம் ஷெட்டி நாயகன் 'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் குறித்து பேசும்போது....
![[Image: Untitled-1_74.jpg]](https://image.nakkheeran.in/cdn/farfuture/dsfe_RtdD9SssSBYc7bU1HxINn9GMPLl2OuUxMudppM/1565596769/sites/default/files/inline-images/Untitled-1_74.jpg)
''சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார். அவர் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும். மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.
first 5 lakhs viewed thread tamil


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)