Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்!'- கண்கலங்கிய மீட்புக் குழு; மலப்புரத்தில் நடந்த சோகம்[/color]

[color=var(--title-color)]மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-08%2Fe8e8dfb1-99df-440a-9...2Ccompress][color=var(--meta-color)]குழந்தை துருவ்வுடன் கீத்து[/color]
[color=var(--content-color)]கால்நூற்றாண்டுகளில் இல்லாத இரண்டாவது பிரளயத்தைச் சந்தித்துள்ளது கடவுளின் தேசமான கேரளம். கடந்த வருடம் ஏற்பட்ட சோகத்தின் நினைவுதினம்கூட அனுசரிக்கப்படவில்லை, அதற்குள் மீண்டும் பெரிய சோகத்தை சந்தித்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் மழை, வெள்ளம். மாநிலமே துயரத்தைச் சந்தித்துவருகிறது. பெருமழையைவிட நிலச்சரிவுதான் இந்தமுறை கேரள மக்களை வாட்டிவதைத்து வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா என இரண்டு கிராமங்கள் மண்ணில் புதையுண்டு இன்றோடு மூன்று நாள்களுக்கு மேலாகிறது. இதில் சிக்கியிருக்கிறவர்களின் நிலை என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2F5f8431cc-36de-475d-9...2Ccompress]
சடலத்தை மீட்டு வரும் குழுவினர்
[/color]
[color=var(--content-color)]இப்படி துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கேரள மக்களை மேலும் ஒரு சம்பவம் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மலப்புரம் அருகே உள்ள கொட்டகுன்னு அருகே உள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் செய்த தனது காதல் மனைவி கீத்து, தனது ஒன்றரை வயது குழந்தை மற்றும் தாய் சரோஜினி ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவ் உடன் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்துள்ளார். அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட `நிலச்சரிவு வருகிறது ஓடுங்கள்' எனக் கத்தியபடியே சரத் ஓட அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, ஒன்றரை வயது சிறுவன் துருவ் மற்றும் சரோஜினி ஆகிய மூவரும் மண்ணுக்குள் புதைய சரத் மட்டும் தப்பித்துவிட்டார்.[/color]
ADVERTISEMENT



POWERED BY PLAYSTREAM
[Image: mute.png]

[color=var(--content-color)]கிட்டத்தட்ட மூன்று நாள்கள் ஆகிவிட்டது. இன்று கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. சரத்தும் கீத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்துவந்துள்ளனர். காதலுக்கு கீத்துவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. துருவ் பிறந்தபிறகு குடும்பத்தினரின் கோபம் தணிந்துள்ளது. இதனால் இருவரையும் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர் கீத்துவின் குடும்பத்தினர்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-08%2Fa38a9ff3-7619-4547-a...2Ccompress]
குழந்தை துருவ்வுடன் கீத்து மற்றும் சரத்

[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 13-08-2019, 09:27 AM



Users browsing this thread: 51 Guest(s)