Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அமித்ஷாவின் அடுத்த குறி.. திட்டமிட்டு காய் நகர்த்தும் பாஜக.. எடுபடுமா தமிழக மக்களிடம்?

போனமுறை 5-ல் ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லை. இதை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதனால் பல வழிகளில் ஏன் தோல்வி என்பதை ஆராய்ந்தது.
தமிழக பாஜக தலைமை ஒரு விளக்கம் தந்தது, கூட்டணியில் உள்ள அதிமுக ஒரு விளக்கம் தந்தாலும், அமித்ஷா வேறு வகையில் இந்த தோல்வியை டீல் செய்ய ஆரம்பித்தார். இதற்கான 
பலம்
அதன்படி, அதிமுக வேட்பாளர்கள்தான் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர் என்பது தெரியவந்தது. இதனையடுத்துதான், தமிழகத்தில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும், அதற்காக கிராம அளவில் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்தார்.குழுவையும் வைத்து காரணங்களை அறிந்தார்.


[Image: amit-shah123-1565603298.jpg]
 
[color][size][font]
வேலூர் தேர்தல்
ஒருகட்டத்தில், உள்ளாட்சி தனித்துகூட போட்டியிடலாமா என்றுகூட யோசனை செய்ததாக சொல்லப்பட்டது. இந்த இடைப்பட்ட சமயத்தில்தான் அதிமுக-பாஜக இடையே எந்த மாதிரியான இணக்கம் உள்ளது என்பது வெளிப்படையாக தெரியாமலும் போனது. இருந்தாலும் வேலூர் தேர்தலில் பாஜகவை தள்ளி வைத்தும், அக்கட்சி தொண்டர்கள் அதிமுக வெற்றிக்காக களப்பணியில் இறங்கி வேலை பார்க்கவே செய்தனர்.[/font][/size][/color]

[Image: ravindranath55656-1565603307.jpg]
 
[color][size][font]

ரவீந்திரநாத்
கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு, தற்போது அதிமுக-பாஜக கட்சிகள் இடையே ஒரு சுமூகமான போக்கு தென்பட தொடங்கி உள்ளது. மக்களவையில் முக்கிய மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு தந்து வருகிறது. இது போக அதிமுக எம்பி ரவீந்திரநாத் பாஜகவுக்கு ஆதரவான கருத்தையும் பகிரங்கமாக எடுத்து வைத்து வருகிறார். இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.[/font][/size][/color]

[Image: amitshah-eps2-1565499362-1565603425.jpg]
 
[color][size][font]
அமித்ஷா
இதையடுத்துதான், நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்காக அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது முதல்வர் எடப்பாடியாரை திடீரென சந்தித்ததாகவும், அப்போது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
[/font][/size][/color]

[Image: bjp1-1555147186-1565603477.jpg]
 
[color][size][font]
தாமரை[/font][/size][/color]
அதாவது உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என அமித்ஷா கேட்டதாக சொல்கிறார்கள். ஏனென்றால், திமுகவை எப்படியாவது திணறடிப்பதுதான் பாஜகவின் லட்சியமாக உள்ளதாம். அதேசமயம், உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழக கிராமங்களிலும் காலூன்றவும் நினைக்கிறதாம். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 13-08-2019, 09:24 AM



Users browsing this thread: 100 Guest(s)