Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி!
ஓசூர்: ஒகேனக்கல்லில் கடந்த 58 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,85,000 கன அடியாக அதிகரித்தது.


[Image: hogenakkal-1565662795.jpg]



எப்படி
நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.45லட்சம் கனஅடியாக என்று மாறியது. இந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.

[Image: hogenakkal-34-1565600827-1565662883.jpg]
 
[color][size][font]
ஆனால் என்ன
ஆனால் நீர்வரத்து இதோடு நிற்கவில்லை. கர்நாடகாவில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால் நேற்று இரவு முழுக்க காவிரியில் அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. காவிரியில் நேற்று 3 லட்சம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது.


[Image: hogenakka676767-1565662786.jpg]
[/font][/size][/color]
 
[color][size][font]
வெள்ளம்
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி தொடங்கி கிளை அருவிகள் எல்லாம் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு மூழ்கியது. இதனால் அந்த பகுதியே தற்போது வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. கடந்த வருடம் கூட இப்படி நடக்கவில்லை.

[Image: hogenakkal-36-1565600813-1565662875.jpg]
[/font][/size][/color]
 
[color][size][font]
இதற்கு முன் இல்லை
இந்த வெள்ளம் என்பது கடந்த 58 வருடங்களில் இல்லாத வெள்ளம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மேலும் மழை பெய்யும், அதனால் ஒக்கேனக்கல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 13-08-2019, 09:19 AM



Users browsing this thread: 106 Guest(s)