Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா

[Image: _108249973_8.jpg]படத்தின் காப்புரிமைNOORULLAH SHIRZADA/GETTY IMAGES
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது.
இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார்.
[Image: _108272094_ee09083b-8e3f-41b7-9a68-5706868bccf0.jpg]படத்தின் காப்புரிமைPRADEEP KUMAR
இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் அந்தப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மாதங்களாக சுத்தமான குடிநீர் வராததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு முழு ஆவேசமாக ராஜ்பதி பன்வாலா என்ற விதவை முழக்கம் எழுப்பியபோது, நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
''அரசாங்கம் வாரம் இருமுறை தரும் தண்ணீரை எங்களுடைய கால்நடைகள் கூட குடிக்க முடியாது,'' என்று போராட்டக் களத்தில் அவர் தெரிவித்தார்.
''நான் விலை கொடுத்து குடிநீர் வாங்குகிறேன். அதற்கு மாதம் 500 ரூபாய் செலவாகிறது,'' என்று நம்மிடம் கூறிய அவர், விலைகொடுத்து தண்ணீர் வாங்கிய கோப்பையைக் காட்டினார்.
[Image: _108272095_18402f44-f9e0-47b4-b950-54800af09914.jpg]படத்தின் காப்புரிமைPRADEEP KUMAR
போராட்டக் களத்தில் இருந்து, நம்மிடம் பேச வந்த அவருடைய தோழி நீலம் தின்ட்ஷா, தன்னால் விலை கொடுத்து தண்ணீர் கோப்பையை வாங்க முடியவில்லை என்று கூறினார்.
``தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத கிராமவாசிகள் பலர் இருக்கிறார்கள்'' என்று முகத்தை மூடிய துணியை அகற்றியபடி அவர் குறிப்பிட்டார்.
பொது குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், ''எங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிலத்தடி நீர், நோய்களை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.
''என் வீட்டு வேலைகளை முடிக்கவும், விவசாய நிலத்தில் வேலை பார்க்கவும் காலையில் நான் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்றாலும், இந்தக் காரணத்தால்தான் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.''
உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள உலகளாவிய தகவல் தொகுப்பில், மிக மோசமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ள இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்டியலில் ஹரியானாவும் ஒன்று
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 12-08-2019, 05:53 PM



Users browsing this thread: 89 Guest(s)