Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயத்திற்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்படுமென தமிழக முதலமைச்சர் கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
காவிரி டெல்டா பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் நீர்த்தேக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தால் அந்த நாளில் அணை திறக்கப்படவில்லை.
இப்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டும் 90 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 65 டி.எம்.சியாக உள்ளது. மேலும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ளது.

[Image: _108282939_d46ca0ec-f8df-43fc-bce7-bb83ab14d639.jpg]படத்தின் காப்புரிமைSALEM.NIC.INImage captionமேட்டூர் அணை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யுமெனத் தெரிவதாலும் தற்போதைய நீர் இருப்பை மனதில்கொண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தானே நேரில் சென்று அணையைத் திறந்துவைக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்திலும் அதனை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பாலக்காட்டிலும் பெய்துவரும் மழையால் பவானி அணைக்கு வரும் நீரின் அளவுக்கு வெகுவேகமாக அதிகரித்துவருகிறது.
பைகாரா, பில்லூர், அப்பர் பவானி நீர்த்தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துவருவதால் அந்த நீர்த்தேக்கங்களிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் திருச்சியில் கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது இடிந்து விழுந்த முக்கொம்பு அணை, சரி செய்யாததால் காவிரியில் வரும் வெள்ள நீர் வீணாக கொள்ளிடத்தில் பாய்ந்து கடலில் கலக்குமெனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 12-08-2019, 05:51 PM



Users browsing this thread: 65 Guest(s)