12-08-2019, 05:50 PM
காவிரியில் 2. 4 லட்சம் கன அடி நீர்: அபாய அளவைத் தாண்டியது
படத்தின் காப்புரிமைKAR.NIC.INImage captionகிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்துவருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு சுமார் 2.4 லட்சம் கன அடியை எட்டியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று திறந்துவிடப்பட்ட நீர் ஞாயிற்றுக்கிழமையன்று பிலிகுண்டுலுவை அடைந்ததால் அந்தப் பகுதியில் உச்சபட்ட வெள்ள மட்டத்தைத் தொடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்துவந்தது.
படத்தின் காப்புரிமைKAR.NIC.INImage captionகபினி அணை
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் பதினைந்து அடி உயர்ந்து, 82 அடியை எட்டியது. மத்திய நீர் அணையம் நேற்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, காவிரிக்கு தற்போது ஒரு நாளைக்கு 15-20 டிஎம்சி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால், மேட்டூர் அணை தனது அதிகபட்ச உயரமான 120 அடியை இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் எட்டிவிடுமென கூறப்பட்டது.
ஆனால், தற்போது மேட்டூர் அணைக்கு சுமார் 2.4 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஹொகேனக்கல் அருவிகளை மூடியபடி தண்ணீர் பாய்ந்துவருகிறது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பின்படி, காவிரி நீர் தமிழகத்திற்குள் நுழையும் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.
படத்தின் காப்புரிமைM. NIYAS AHMEDImage captionஹொகேனக்கல் அருவிகளை மூடி நீர் பாய்ந்து வருகிறது. (கோப்புப்படம்)
இந்தப் பகுதியில் இதற்கு முன்பாக அதிக பட்சம் 265.7 மீட்டர் அளவுக்கு தண்ணீர் பாய்ந்ததே உச்சபட்ச அளவாக (HFL)இருந்தது. ஆனால், தற்போது கர்நாடகத்திலிருந்து பெருமளவு நீர் திறக்கப்பட்டிருப்பதால், நீர்மட்டம் பிலிகுண்டுலுவில் 266 மீட்டர் உயரத்தையும் தாண்டிப் பாய்ந்து வருகிறது.
தற்போது அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

first 5 lakhs viewed thread tamil