08-01-2019, 11:51 AM
பிரபல ஆன்டிவைரஸ் மற்றும் கணினி பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெர்ஸ்கை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை டார்க் வெப் சமூகத்துக்கு 3,500 ரூபாய்க்கும் மேலான தொகைக்கு விற்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் புகைப்படங்களாக இருக்கலாம், மெசேஜ்களாக இருக்கலாம், முக்கிய ஆவணங்களாக இருக்கலாம். எனவே, பாதுகாப்பாக இருக்க வேண்டியது நமது கடமையே. பிரபல டேட்டா ரெகவரி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொள்ள, ஏற்கெனவே பயன்படுத்திய ஹார்ட்டிஸ்க் பலவற்றை வாங்கி சோதனை செய்தது. இதில் அதிகமானவை முழுதாக டேட்டா நீக்கம் செய்யாமல் வெறும் ஃபார்மட் மட்டும் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஃபார்மட் செய்தால் போதாதா என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்திருக்கும்.
ஆம், ஃபார்மட் செய்வதன் மூலம் மட்டும் டேட்டா அனைத்தும் அழிந்துவிடாது. அவற்றை சில ரெகவரி டூல்கள் மூலம் வெளியே எடுக்க முடியும். எனவே, சரியாக அனைத்து டேட்டாவையும் நீக்காமல் இப்படி விற்பது ஆபத்தான ஒரு விஷயம். எனவே, இந்த வழிமுறையைப் பின்பற்றுவது நல்லது.