08-01-2019, 10:01 AM
வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு அனுபவத்தாலும் சமயோசித அறிவாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்