screw driver ஸ்டோரீஸ்
"..............................."

"அவளை மறக்கனும்னா இதுதான் ஒரே வழி.. அதான்..!!"

"..............................."

"ஏ..ஏதோ ஒருவேகத்துல எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆனா சாப்பிட போறப்போ.. என்னன்னவோ யோசனை மம்மி..!! நீ.. டாடி.. சங்கி.. தாத்தா, பாட்டி.. ஃப்ரண்ட்ஸ்..!! ரொம்ப கஷ்டமா இருந்தது..!!"

"..............................." அமைதியாக மகனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு, இப்போது கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.

"அ..அவகூடதான் என் லைஃப்னு.. நான் எப்போவோ முழுசா நம்பிட்டேன் மம்மி.. மனசுக்குள்ள என்னல்லாம் ஆசை தெரியுமா..?? இப்போ.. 'அவ இல்லாம ஒரு லைஃப் இருக்குது.. அடம்புடிக்காம வாழ்ந்துபாரு'ன்னு.. நீங்க எல்லாரும் சொல்றப்போ.. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல மம்மி..!! அந்த லைஃப் மேலேயே எனக்கு வெறுப்பா வருது..!!"

அசோக் சொல்ல சொல்ல.. பாரதியின் மூளைக்குள் பலவித யோசனைகள்..!! அவளும் மற்றவர்களும் செய்த தவறு, இப்போது அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆறுதலும், நம்பிக்கையும் நாடியவனுக்கு அவநம்பிக்கையை கொடுத்துவிட்ட தவறு..!! தாங்கள் செய்த அந்த தவறை உடனே சரி செய்தாகவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.. இல்லாவிட்டால் ஆசையாக வளர்த்த மகனை அநியாயமாக இழக்க நேரிடும் என்றும் புரிந்தது..!!

அதே நேரம்.. அசோக் செய்த தவறும் அவளுடைய மனதை தைக்காமல் இல்லை.. அதையும் அவனுக்கு சுருக்கென சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்..!! இனி இந்த மாதிரி எண்ணம் அவனுக்கு என்றுமே தோன்றக்கூடாது..!! மனதுக்குள்ளேயே ஒரு கணக்கு போட்டவள்.. சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. குரலிலும் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு.. பட்டென்று சொன்னாள்..!!

"சரி எங்களுக்குத்தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி..??"

பாரதி திடீரென அந்தமாதிரி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை படக்கென நிறுத்தினான்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தான்..!! சற்றே தடுமாற்றமான குரலில்..

"எ..என்ன சொல்ற.." என்றான்.

"பின்ன என்ன..?? நாங்க 'மறந்துடு'ன்னு சொன்னா.. 'என்னால மறக்க முடியாது.. உங்க வேலையை பாத்துட்டு போங்க'ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி நீ சொல்ல வேண்டியதுதான..?? 'அவ கெடைக்க மாட்டா'ன்னு சொன்னா.. 'கண்டுபிடிக்கிறனா இல்லையா பாருங்க'ன்னு சவால் விட வேண்டியதுதான..?? குடிச்சுட்டு கண்டவன் கூட ரோட்ல சண்டை போடுறதுக்கு பதிலா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிருக்கலாம்ல..??"

பாரதி படபடவென பேசப்பேச.. அசோக்கின் மனதில் ஒரு புதுவித உணர்வு பரவ ஆரம்பித்தது..!! இரண்டு வாரங்களாக இருந்த இறுக்க உணர்வை தளர்த்த ஆரம்பித்த, ஒரு இலகுவான உணர்வு.. தளர்ந்து போயிருந்த அவனது இதயத்திற்கு தைரியமூட்டுகிற மாதிரியான நம்பிக்கை உணர்வு..!! பாரதி தொடர்ந்து பேசினாள்..!!

"அடுத்தவங்க சொல்றதைக்கேட்டு உனக்கா ஒரு வைராக்கியம் வந்திருக்கனும்.. 'இதுக்குலாம் உடைஞ்சு போயிடக்கூடாது.. அவளை தேடிக்கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் நிறுத்தனும்..!! அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து.. பேரன் பேத்தியை அவங்க கொஞ்சுறப்போ.. ஒருகாலத்துல என்னல்லாம் சொன்னீங்கன்னு கேலி பண்ணனும்..!!' அந்த மாதிரிலாம் உனக்கு வைராக்கியம் வந்திருந்தா.. உனக்கும் புத்தி இருக்குன்னு அர்த்தம்..!!"

[Image: RA+61.jpg]



"..............................."

"அதைலாம் விட்டுட்டு.. இப்படி தம்மடிக்கிறதும், தண்ணியடிக்கிறதும், பொலம்புறதும், சண்டை போடுறதும்.. என்னடா இதெல்லாம்..?? அதெல்லாம் பாக்குறப்போ எங்க மனசு என்னபாடு படும்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா..?? பத்தாக்கொறைக்கு மாத்திரை டப்பாவை வேற தூக்கிட்டு வந்துட்டான்.. புத்திசாலிப்புள்ள..!!"

பாரதி இகழ்ச்சியாக சொல்ல.. அசோக் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்..!! அவனுக்குமே இப்போது அவன் செய்த தவறு தெளிவாக விளங்கிற்று..!! தனக்கிருந்த மன அழுத்தைத்தை அப்பட்டமாக வெளியே காட்டி.. தன்மீது அன்பு வைத்திருந்தவர்களை பயமுறுத்திவிட்டோம் என்று தோன்றியது.. தைரியம் இழந்தது தவறென்று புரிந்தது..!!

"உன் காதல் உண்மையானதுதானடா..??" பாரதி திடீரென கேட்க, அசோக் திகைத்துப் போனான்.

"எ..என்ன மம்மி இப்படி கேக்குற..??"

"ப்ச்.. சொல்லுடா..!! உன் காதல் உண்மையானதுதான..??"

"ஆ..ஆமாம்..!! அதுல என்ன உனக்கு சந்தேகம்..??"

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..??"

"கா..காதல் மேல நம்பிக்கையா.. அ..அப்படினா..?? என்ன கேக்க வர்றன்னு எனக்கு புரியல..!!"

அசோக் குழப்பமாக அம்மாவின் முகத்தை ஏறிட.. இவள் இப்போது சற்றே நிதானித்தாள்..!! எதைச்சொல்லி மகனுக்கு புரியவைப்பது என்று ஒருசில வினாடிகள் யோசித்தாள்..!! பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு.. மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்..!!

"உன் அப்பாவோட எழுத்தை மட்டுந்தான் நான் அப்போ பாத்திருக்குறேன் அசோக்.. வேற எதுவும் எனக்கு அறிமுகம் இல்ல.. அவரு கருப்பா செவப்பான்னு கூட எனக்கு தெரியாது.. அவரோட குரலை கூட மெட்ராஸ்க்கு கெளம்புறதுக்கு மொதநாள்தான் கேட்டேன்..!! வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஆத்துக்கு போறதுக்கே அவ்வளவு பயப்படுற பாரதிதான்.. ஐநூறு கிலோமீட்டர் தனியா தாண்டி வந்தேன்..!! உடம்பெல்லாம் ரத்தம் வடிய.. கைல காசு இல்லாம.. கால்ல செருப்பு இல்லாம.. கட்டின பொடவையோட.. முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத ஊருக்கு..!! எந்த நம்பிக்கைல வந்தேன்னு நெனைக்கிற..??" பாரதி கேட்டுவிட்டு மகனை கூர்மையாக பார்க்க,

"..............................." அவனிடம் எந்த பதிலும் இல்லை.

"காலங்காத்தால நாலு மணிக்குலாம்.. கொஞ்சம் சீக்கிரமாவே.. அந்த ட்ரெயின் மெட்ராஸ் வந்துடுச்சு.. கொட்டுற பனில.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல தன்னந்தனியா நின்னுட்டு இருந்தேன்..!! யாராரோ வர்றாங்க போறாங்க.. ஒருமாதிரி பாக்குறாங்க.. பேச்சு குடுக்குறாங்க.. அம்மாக்கு ரொம்ப பயமா இருந்துச்சுடா..!!"

"..............................."

"உன் அப்பா வந்து சேர்றதுக்கு அரை மணி நேரம் ஆச்சு..!! அந்த அரைமணி நேரமும்.. 'எப்போடா அவர் வருவாரு.. அவர் நெஞ்சுல சாஞ்சு ஓன்னு அழலாம்..'னு நெனச்சுட்டு இருந்தேனே ஒழிய.. ஒரு செகண்ட் கூட.. 'அவரு வருவரோ வரமாட்டாரோ'ன்னு என் மனசு சந்தேகப்படல அசோக்.. சத்தியமா..!!"

"..............................."

"என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைடா.. 'நம்ம காதல் உண்மையானது.. அது நம்மள கஷ்டத்துல தள்ளிடாது'ன்னு ரொம்ப நம்பிக்கை..!! இன்னைக்கு எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கெடைச்சிருக்குன்னா.. அதுக்கு காரணம், என் காதல் மேல நான் வச்சிருந்த நம்பிக்கைனாலதான்..!! அந்த நம்பிக்கை உன் காதல் மேல உனக்கு இருக்கா..?? ஒரு நல்ல வாழ்க்கையை அந்தக்காதல் அமைச்சு குடுக்கும்னு.. உன் மனசார நம்புறியா..??"

"..............................." அசோக் அமைதியாகவும், திகைப்பாகவும் பார்த்துக்கொண்டிருக்க, பாரதியே தொடர்ந்தாள்.

"நம்பு.. உன் காதலை முழுசா நம்பு..!! காதலும் கூட கடவுள் மாதிரிதான்டா.. நம்புனவங்களை சோதிக்கும்.. ஆனா கைவிடாது..!! காதலுக்கு உண்மையா இருந்தா மட்டும் பத்தாது.. உண்மையான அந்த காதல் மேல அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைக்கணும்..!! இது ரெண்டும் இருந்துட்டா.. அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்..!!"

மிக உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்..!! அசோக் எதுவுமே பேசத்தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான்.. அம்மா சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தையே, அவன் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது..!! அந்த அர்த்தம் புரிய புரிய.. இருண்டு போயிருந்த அவனது இதயத்தில்.. மெலிதாக ஒரு ஒளிக்கீற்று எட்டிப்பார்த்தது..!!

தீவிர யோசனையில் இருக்கும் மகனையே.. பாரதி சிறிது நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மகனின் மனநிலை இப்போது அவளுக்கு தெளிவாக புரிய.. அவள் மனதில் ஒரு நிம்மதி..!! அந்த நிம்மதி அவளது முகத்திலும் பரவ.. பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறே.. கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள்..!!

"சரிடா.. அம்மா கெளம்புறேன்.. தலைக்கு மேல வேலை இருக்குது.. பாத்திரம்லாம் அப்டியே கெடக்குது.. கழுவி எடுத்து வச்சுட்டு டிபன் ரெடி பண்ணனும்.. மாமா வேற கால்வலின்னாரு.. போய் தைலம் தேச்சு விடனும்.. எந்திரிக்கிறப்போ காபி ரெடியா இல்லைன்னா, உன் தங்கச்சி வேற பேயாட்டம் ஆடுவா..!! ஹ்ம்ம்... நீ குளிச்சுட்டு சீக்கிரம் கீழ வா.. நைட்டு வேற சாப்பிடல.. வயிறுலாம் காஞ்சு போய் கெடக்கும்.. வந்து சுடச்சுட ஒரு பத்து இட்லியாவது இன்னைக்கு சாப்பிடனும்.. சரியா..!!"

மிக இயல்பாக சொல்லிக்கொண்டே அறைவாசலை நோக்கி நடக்கிற அம்மாவை.. அசோக் வித்தியாசமாக பார்த்தான்..!! அடுத்த கணமே.. மேஜை மீதிருந்த தூக்கமாத்திரை டப்பா அவனது கண்களில் படவும்.. அவசரமாக அவளை அழைத்தான்..!!

"ம..மம்மி.."

"ம்ம்..??" பாரதி திரும்பி பார்த்து கேட்டாள்.

"இ..இது.. இ..இந்த டப்பா.." அசோக் இழுத்தான்.

"ஆங்.. அதுக்கென்ன..??"

"இல்ல.. இ..இங்கயே வச்சுட்டு போயிட்ட..??"

"ஹ்ம்ம்.. நல்லாருக்கே..!! நான் என்ன உனக்கு எடுபுடியா..?? நீதான எடுத்துட்டு வந்த.. நீயே போய் எடுத்த எடத்துல வச்சுடு..!!"

கிண்டலான குரலில் சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க.. அசோக்காலும் அவனுடைய உதட்டில் கசிந்திட்ட ஒரு புன்முறுவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் அவனது இதழ்களில் பூத்துக்கொண்ட மெலிதான ஒரு புன்னகை அது..!!

"தேங்க்ஸ் மம்மி..!!" என்றான், திரும்பி நடக்கிற பாரதியின் முதுகை பார்த்து.

அசோக்கிடம் ஒருவித அலட்சியத்துடன் பேசிவிட்டு வந்திருந்தாலும்.. பாரதியின் மூளை என்னவோ உள்ளே ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது.. படி இறங்கியவளின் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! மகனின் நிலை பற்றி பலவிதமான சிந்தனைகள்.. அடுத்து என்னென்ன செய்வது என்பது மாதிரியான கேள்விக்குறிகள்.. அவசர அவசரமாக ஆனால் மிக தெளிவாக எடுக்கப்பட்ட சில முடிவுகள்..!! படியிறங்கி கீழ் தளத்திற்கு வந்த பாரதி..

"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!"



என்று இன்னமும் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த மாமனாரை.. தற்காலிகமாக அலட்சியம் செய்தாள்..!! சுவற்றோடு ஒட்டியிருந்த அந்த டெலிஃபோனைத்தான் முதலில் அணுகினாள்.. டயல் செய்துவிட்டு ரிஸீவரை காதில் பொருத்திக்கொண்டாள்.. அடுத்த முனையில் இருந்து 'ஹலோ' ஒலித்ததும்..


"ஆங்.. பவானி.. அத்தை பேசுறேன்மா..!!" என்றாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 11-08-2019, 11:09 AM



Users browsing this thread: 6 Guest(s)